பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அர்த்த பஞ்சகம் 'இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கன் போலன்றிக்கே கண்ணிலே காணலாம்படி இருக்கும்' (140) என்று இவ்வவதாரத்தின் எளிமை பேசப்படுவதையும் d:#fT3ðið GR)ff is), - பிரபத்தி வகைகள் : இந்தப் பி பத்தி ஆர்த்தரூப பிர பத்தி திருப்தரூபபிரபத்தி என இருவகைப்படும். ஆர்த்தரும் பிரபத்தியாவது, இந்த உடல் உள்ள வரையிலும் கூட சமுசாரத்தளையைப் பொறுக்கமாட்டாமல் இந்தக்கணமே முத்தி அடைய வேண்டும் என்று விரும்பிப் பிரபத்தியை அநுட் டிப்பது. இதனால் இந்தக் கணமே முத்தி அடை வதில் சிறிதும் ஐயம் இல்லை. "ஒயும் மூப்பும் பிறப்பு, இறப்பு: பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன்' (திருவாய் 8-3:9) ஆகையாலே, 'திருவேங்கடத் தானே, புகல்ஒன்று இல்லா அடியேன்” (டிெ6-10:10), வேங்கடத்து உறைவார்க்கு நம: (டிெ 3-3:6) என்று பூர்ண பிரபத்தி பண்ணி பாவியேனைப் பல நீகாட்டிப் படுப்பாயோ; (டிெ 6-9:9), "நெடுமாலே கிறிசெய்து என்னைப் புறத்திட்டு, இன்னங் கெடுப்பாயோ?” (டிெ 6-9:3) "அக்கரை என்னும் அனந்தக் கடலுள் அழுந்தி உன்பேர் அருளால், இக்கரை ஏறி இளைத்திருந்தேனை’’ (பெரியாழ். திரு. 5.3.7), அடைய அருளாய், எனக்கு உன்தன் அருளே (பெரி. திரு. 11.8:6), 'உன் திருமார் வத்து மாலை நங்கை, வாசஞ் செய் பூங்குழலாள்" திரு ஆணை: நின் ஆணை கண்டாய்” (டிெ திருவாய் 10-10:2) 'இனிநான் போகல் ஒட்டேன்' (டிெ 10-10:1) என்று தடுத்தும் வளைத்தும் பெறுதல் இப்பிரபத்தியாகும் என்று தெளியலாம். திருப்தரூப பிரபத்தியாவது, இந்த உடல் நீடிக்கும் வரையிலே வினைப்பயன்களைத் துய்த்து உடல் முடிவில் முத்தியைப் பெற விரும்பிப் பிரபத்தியை அநுட்டித்தலாகும்.