15. வாகன அலைகள்
ஒலி பரப்பும் நிலையங்களிலிருந்து வரும் வானொலி அலைகள் (radio waves) மிக வேகமான அதிர்வுகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். இந்த அலைகளின் நேர் - மின்னூட்டங்களும் எதிர் - மின்னூட்டங்களும் வினாடியொன்றுக்கு 1,000,000 லிருந்து 10,000,000 தடவைகள் வரை மாறிமாறி அதிர்ந்து கொண்டுள்ளன. இந்த அதிர்வுகள் நம்முடைய வானெலிப் பெட்டிக்கு மிகவும் அதிக வேகம் என்றே சொல்ல வேண்டும். நம்முடைய வானொலிப் பெட்டியினுள் நுழையும் வானொலி அலைகள் ஒலிபரப்பு நிலையங்களில் இரு திசை மின்னோட்டத்தால் உண்டாக்கப்பெற்று எல்லாப் பக்கங்களிலும் பரவிக்கொண்டிருப்பவையாகும். இந்த இருதிசை மின்னோட்டம் முன்னர்க் குறிப்பிட்டபடி நம்முடைய கைவிரலிலிருந்து கதவிலுள்ள உலோகக் குமிழுக்குப் பாய்ந்த பொறியைப் (spark) போன்றது.
ஒரு கம்பியினுள் மின்னணுக்கள் (electrons) தொடர்ச்சியாக ஒர் அருவிபோல் நகர்ந்து செல்வதைத்தான் மின்னோட்டம் என்று நாம் குறிப்பிடுகின்றோம். இங்ஙனம் மின்னணுக்கள் ஒரே திசையில் நகராமல் வினாடியொன்றுக்கு இலட்சக் கணக்