84
சிலுசிலுவென்று சாரல் வீசிக்கொண்டிருந்தது. பன்னீர் தெளிப்பதுபோல இருந்தது அது இறைவன் திருக்கோயிலே வலம் செய்துகொண்டிருந்தார்கள், அந்த இரண்டு பெண்மணிகளும், உள்ளேகோயிலுக்குச் சென்று குற்றால நாதரையும் குழல் வாய்மொழியம்மையையும் வணங்கிவிட்டு இப்போது வெளிப் பிராகாரத்தை வலம் வந்துகொண்டிருந்தார்கள். பேசிக் கொண்டு வந்த பெண்மணி உடம்பு முழுவதும் பொன்னும் மணியும் புனைந்திருந்தாள். வளப்பமான தோற்றம். பார்த்த அளவிலே செல்வம் நிறைந்த குடியைச் சார்ந்த பெண்மணி என்று தெரியும். அவளுடன் வந்த நங்கை சற்றே இளையவள். முகத் தோற்றத்தைப் பார்த்தால் இருவரும் சகோதரிகள் என்று சொல்ல இயலாது. இவர்கள் யார்?
திருநெல்வேலிச் சீமையில் பழைய காலத்தில் பல பாளையப்பட்டுகள் இருந்தன. இப்போது சொக்கம் பட்டி என்ற பெயரோடு வழங்கும் இடம் முன்பு ஒரு சமீனுக்கு இருப்பிடமாக இருந்தது. வடகரை யாதிக்கம் என்ற பெயரால் அதை வழங்கி வந்தனர். அந்தச் சமீனில் இருந்து ஆட்சி நடத்தியவர்களில் சின்னணைஞ் சாத்தேவர் என்பவர் மிக்க புகழ் பெற்றவர். அவரைப் பாராட்டிப் புலவர்கள் பாடிய பிரபந்தங்கள் பல உண்டு. அந்தக் குடியில் வந்தவர்கள் திருக்குற்றாலநாதர் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். திருக்குற்றால நாதரிடம் பேரன்பு பூண்டு அடிக்கடி வந்து தரிசனம் செய்து போவார்கள்.
அந்த மரபில் சின்னணைஞ்சாத் தேவருக்கு முன் இருந்த சமீன்தார் ஒருவரின் மனைவியும் அவருடைய தங்கையுமே மேலே சொன்னபடி திருக்கோயிலை வலம் வந்துகொண்டிருந்தார். இருவரும் மனம் கலந்து பழகுகிறவர்களாதலின் மகிழ்ச்சியோடு உரையாடிக்