8孕 அன்பின் உருவம்
"காற்று எங்கும் இருந்தாலும் அதைக் காணமுடி கிறதா? அது அசையாமல் இருந்தால் உணரக்கூட முடிகிற தில்லையே!”
"அப்படியானல் அவன் எங்கும் இருக்கிருன் என்ப
உண்மையாகுமா?" -
'நமக்குத் தெரியாவிட்டால் இல்லையென்று சொல்ல லாமா? அவன் எங்கும் இருப்பதை உணர்பவர்கள் இருக்கி ருர்கள். அவனே ஓரிடத்திலும் காணுதவர்களும் இருக்கிருர் கள். அத்தகையவர்களுக்கு அவன் இருந்தும் இல்லாதவகை இருக்கிருன். ஆனல் அவன் மெய்யான பொருள். அன் பர்களுக்குச் சத்தியப் பொருளாக இருக்கிருன். அன்பு
இல்லாதவர்களுக்கு அவன் இருப்பதே தெரிவதில்லை.”
- אר
பூமிக்கு அடியில் எங்கும் நீர் இருக்கிறது. ஆல்ை வெட்டிப் பார்த்தவர்களுக்கே அது புலனுகிறது. மணலில் இரும்புப் பொடி கலந்திருக்கிறது. வெறுங்கட்டையை மணலில் இட்டால் இரும்புப் பொடி ஒட்டாது. காந்தத்தை விட்டால் இரும்புப் பொடி ஒட்டிக்கொள்கிறது. அப் படியே இறைவன் எங்கும் செறிந்த மெய்யனாக இருந்தா லும் அன்பென்னும் காந்தம் இருந்தால் அவனேக் கண்டு
கொள்ளமுடியும். -
தமக்கு வெளிப்படையாகத் தோற்ருத கள்வகை இருப்பதால் அவனே இல்லையென்று சொல்கிருர்கள் சிலர். மெய்யன் என்ருல் பொய்யன் என்று மறுக்கிருர்கள். உள். ளத்தில் அன்பு இல்லாத தம்முடைய பொய்ம்மையை உண ராமல் இறைவனிடம் பொய்ம்மையை ஏற்றுகிருர்கள். வேகமான ரெயிலில் செல்லும்போது தரையும் மரமும் ஒடு வதைப் போலத் தோன்றுகின்றன. குழந்தைகள் அதைப் பார்த்து, "மரங்கள் ஓடுகின்றன; வண்டி கிற்கிறது"