பக்கம்:அன்பின் உருவம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மானைப் பாட்டு 85

என்று சொல்வார்கள். ஆண்டவனுடைய அருள்பெருமல் குழந்தையைப் போல அறியாமையை உடையவர்கள், தாம் பொய்ம்மையோடு இருப்பதை அறியாமல் இறை வனைப் பொய் என்று சொல்லுகிருர்கள். சொல்லத் தைரியம் இல்லாதவர்கள், மனசுக்குள் உண்டோ இல் இலயோ என்ற ஐயத்தோடு இருக்கிருர்கள், !

கடவுளே மெய்யனென்று உணர்கிறவர்கள், அல்லாத வர்கள் என்று உலகில் உள்ளவர்களே இரண்டு வகுப் பாகப் பிரிக்கலாம். அவனிடம் அன்புள்ளவர்கள் மெய்ய னென்று உணர்கிருர்கள். அன்பர் அல்லாதார் மெய்யன் அல்லன் என்று எண்ணுகிருர்கள் அவர்களுக்கு அவன் அல்லாதான். - -

இப்படி இரு கூறுபட்ட உலகத்தில் மூன்ருவது சாட்சி ஒன்று இல்லேயா? இருக்கிறது. அதுதான் வேதம். பகையையும் சட்பையும் மனத்திலே கொண்டு எடைபோடு, வது மனிதனுக்கு இயல்பு. "ஆண்டவன் எனக்கு அருள் செய்கிருன்; அவன் எனக்கு மெய்யனக இருக்கிருன்” என்று அன்பர்கள் சொன்னல் அதை மற்றவர்கள் கம்பா மல் இருக்கலாம். இரண்டு வகையாருக்கும் பொதுவாக என்றைக்கும். மெய்யான சாட்சியாக இருப்பது வேதம். அது தனக்குரிய பொருள் இறைவன் என்று சொல்கிறது:

அவன் சத்தியப் பொருள் என்று அறிவுறுத்துகிறது. . . .

இதல்ை இறைவனுக்கு வேதியன் என்ற திருநாமம் அமைக் திருக்கிறது. - - - -

எங்கும் செறிந்தான அன்பர்க்கு மெய்யானே அல்லாதார்க்கு அல்லாத வேதியனே.

அன்பர்களுக்கு மாத்திரம் மெய்யனாக இருந்தால் மற்றவர்கள் அவனே எப்படி அறிவது? அவனே அறிந்து கொள்ளாமலே வாழ்வை விணே கழிக்கும்படி விட்டு