பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

153


உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் தேர் தர வந்த நேர் இழை மகளிர் ஏசுப என்ப, என் நலனே; அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே; தாமும் பிறரும் உளர்போல் சேறல் முழவு இமில் துணங்கை தூங்கும் விழவின் யான் அவண் வாராமாறே வரினே வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல என்னொடு திரியான்ஆயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோற் சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, ஆரியர் படையின் உடைக, என் நேர் இறை முன்கை வீங்கிய வளையே

- பாவைக்கொட்டிலார் அக 336

துளை பொருந்திய தண்டையுடைய சேம்பின் மடலில் உள்ள அகன்ற இலையுடன் கூடிய பாசி படர்ந்த நீர்ப் பரப்பில் குட்டியுடன் கூடியுள்ள உண்ணாமையால் வருந்திய பெண் நாயின் வருத்தத்தைப் போக்குவதற்குக் காலைப் போதில் இரையைக் கொணர்வதற்காக எழுந்தது. ஆண் நீர்ந்நாய். அது வாளை மீனைப் பற்றி அதனுடனே போரிட்ட தால், உண்ணிர் கொள்ளும் நீர்த்துறையின் நீர் கலங்கிக் கிடந்தது. அதனால் நீர் கொள்ள வந்த மகளிர் தெளிந்த கள்ளைக் குடித்து நுண்ணிய தொழிற் சிறப்புடைய குடங் களை ஒரு பக்கத்தில் வைத்து விட்டுத் தம் கணவரின் பரத்தமை ஒழுக்கத்தைப் பாடிக் காஞ்சி மரத்தின் நிழலில் குரவையாடுவர். இனிய பெரிய பொய்கையின் துறை