பக்கம்:அறநெறி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அறநெறி

நும்மினுஞ் சிறந்தது துவ்வைஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம காணுதும் நும்மொடு ககையே

-நற்றினை 172:4-6

இதனாற் பெறப்பட்டது என்னையெனின் புன்னை மரத்தை தமக்கையாக எண்ணி வாழ்ந்த தலைவியின் ஈர நெஞ்சமும் இரக்கவுணர்வும் ஒருங்கே புலனாகின்றன.

இதனை யொத்த செய்தியொன்று குறுந்தொகைப் பாடலொன்றிலும் எதிரொலிக்கக் காணலாம். காதலன் ஒருவன் பலநாள் காதலின் வீட்டெல்லைக்கு வந்து காதலி யுடன் பழகிச் சென்றான். ஆனால் இப்போது நெடு நாட்களாக வரவும் இல்லை; திருமண முயற்சிகளில் ஈடு படவும் இல்லை. இந்நிலையில் காதலிக்குத் துயரம் மேலிடுகிறது. துன்பம் தரும் இராக்காலத்தே முன்னாளில் தன்னைச் சந்தித்துப் பேச வந்த காதலனுக்கு இனிய துணையாக இருந்த (மனைத் தோட்டத்தின்கண் இருந்த) வேங்கை மரத்திற்காகவாவது பிரிந்து செல்வதில் வல்லவராக இன்று திகழும் காதலன், பறவை ஒன்றன் வாயிலாகத் துரது மொழியொன்று சொல்லி விடுத் திருக்கலாம் என்று அலமறுகிறாள். தனக்குத்தான் துது அனுப்பவில்லை. இரவில் அவருக்குத் துணையாக இருந்த வேங்கை மரத்திற்குக் கூடவா தூது அனுப்பக்கூடாது என்பதில் தலைவியின் பிரிவுத்துன்பம் புலனாகிறது.

நமக்கொன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணை யாகிய படப்பை வேங்கைக்கு மறந்தானர் கொல்லோ துறத்தல் வல்லியோர் புள்வாய்த் துதே

-குறுந்தொகை 265

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/82&oldid=586983" இலிருந்து மீள்விக்கப்பட்டது