64
கண்ணகி தேவி
இமயத்திற் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து தருகின்றோம்,' என்று நும் கட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர்,” என்று கூறி நின்றனர். அது கேட்ட செங்குட்டுவன், "வட நாட்டு அரசனாகிய பாலகுமாரன் மக்கள் கனகன் விஜயன் என்ற இருவரும், வடவரசர் பலருடன் கூடியிருந்த அமையத்தில் தம் நாவைக்காவது, எம் முடைய வலிமையை இகழ்ந்துரையாடினராம் ஆதனால் பத்தினிப் படிமத்துக்குக் கல்கொணரச் செல்வதோடு, இகழ்ந்த அவ்வடவேங்தரை வெல்வதற்கும் செல்கின்றது இப்படை என்பதனை நூற்றுவர் கன்னர்க்குத் தெரிவித்துக் கங்கையாற்றைக் கடப்பதற்கு காவாய் முதலியன அமைத்து வைக்கவும் கூறுங்கள்," என்று சஞ்சயனை முன்னர் அனுப்பி வைத்தனன். பின்பு பாண்டியர் முதலிய அரசரிடமிருந்து அச்சமயம் வந்த திறைப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு செங்குட்டுவன் நீலகிரிப் பாடியினின்றும் எழுந்து வடதிசை கோக்கிப் புறப்பட்டான்.
இங்ஙனம் புறப்பட்ட செங்குட்டுவன், கங்கை ஆற்றை அணுகி, தன் நட்பரசராகிய நூற்றுவர் கன்ன்ர் அமைத்து வைத்திருந்த மரக்கலங்களில் ஏறி, அக்கரைசார்ந்து,அவர்களால் உபசரிக்கப்பெற்று,அங்கிருந்தும் புறப்பட்டு உத்தர கோசலத்தையடைந்து, பாசறை அமைத்துத் தங்கியிருக்தனன். இவ்வாறு சேரன் தம் நாட்டில் பாசறையமைத்துத்தங்கியிருப்பதையறிந்தவுடன் அந்நாட்டரசர்களான உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தான், சிலேதன் என்பவர்களைத் துணைக்கொண்டு கனகவிசயர் என்ற வடவேந்தர், 'தமிழர் ஆற்றலைக் காண்போம் என்ற தருக்குக் கொண்டுபெருஞ்சேனையுடன் வந்து எதிர்த்தனர்.இவ்வாறு ஆரியவரசர் ஒருங்கு ஆடி வருதலைக் கண்ட செங்குட்டுவன், இரையை வேட்டு, வேட்டையிற்