பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தர சண்முகனார் ) 21

தைக்கும்படித் தன் உடலை உதறுவது போல், விராதன் தன் உடலில் தைத்துள்ள அம்புகள் கீழே விழும்படித் தன் உடலை உதறினானாம்.

"மொய்த்த முள்தனது உடல்தலை முளைத்த முடுகிக்

கைத்தவற்றின் கிமிரக் கடிது கன்றி விசிறும் எய்த்த மெய்ப்பெரிய கேழலென எங்கும் விசையின் தைத்த அக்கணை தெறிப்பமெய்சிலிர்த்து உதறவே” (32) இது சுவையான உவமையாகும். போர் மறவர்களின் உடம்பு முழுதும் அம்பு தைத்துக் கொண்டிருப்பது நடக்கக் கூடியதே.

தன் கையில் இருந்த வேலை எதிரியின் யானை மேல் போட்டு வெறுங்கையோடிருந்த மறவன், பின் தன் உடம்பில் தைத்துள்ள வேலைப் பிடுங்கிக் கையில் வைத்துக் கொண்டு, போருக்கு வருபவர்கள் யாரும் வரலாம் என்று கூறி மறச் சிரிப்பு சிரித்தான் என்னும் கருத்துடைய

"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்தன்

மெய்வேல் பறியா நகும்” (774)

என்னும் குறள் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

மற்றும், உடம்பு முழுதும் அம்புகளால் தைக்கப் பட்டிருக்கும் ஒருவன், கீழே விழுந்து கிடக்கும் காட்சி, அம்புப் படுக்கையின்மேல் படுத்திருப்பதுபோல் தோற்றம் அளித்ததாம்.

இப்படி ஒரு செய்தி புறப் பொருள் வெண்பா மாலையில் கூறப்பட்டுள்ளது. போர் மறவனின் உடலில் மிகுந்த அம்புகள் தைத்திருப்பதால், அவன் கீழே விழுந்தும், அவன் நிலமகளின் மார்பைத் தழுவாதபடி அம்புகள் காத்தனவாம். அதாவது, அவன் மண் மேல் உடல் படும்படி விழ முடிய வில்லை என்பது கருத்து. பாடல்: