பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 0 ஆரணிய காண்ட ஆய்வு

பார்த்து இருங்கள்’ என்று சொல்லின், வராதீர்கள் - அங்கேயே நில்லுங்கள் என்று சொன்னதாகப் பொருள்படும்.

1969ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குருந்தம்பட்டு என்னும் ஊருக்கு எனது தலைமையில் திரு. ஞானபூரணம் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கச் சென்றேன். மூளைக்கட்டிப் பிணியாளனாகிய யான் துணைக்குப் பதினைந்து வயதுடைய என் மகனையும் அழைத்துச் சென்றேன். நாங்கள் தங்க வசதியான ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வீட்டிற்குள் யானும் என் மகனும் சென்றபோது, அவ்வீட்டார் இருங்க - இருங்க' (இருங்கள்) என்றனர்.

'இருங்க(ள்) என்று சொன்னதை, உள்ளே வராதீர்கள்அங்கேயே நில்லுங்கள் (இருங்கள்) என்று சொன்னதாக என் மகன் பொருள் செய்து கொண்டு முன்னேறாமல் பின் நோக்கி நகர்ந்தான். பிறகு நான், இருங்கள் என்றால் அமருங்கள் என்று பொருள் - நம்மை அமரச் சொல் கிறார்கள் - என்று என் மகனிடம் கூறி அமரச் செய்து நானும் அமர்ந்தேன். -

இங்கே கம்பர் ஏகுமின்' என்று சீதை கூறியதாகக் கூறி நம்மை மிரட்டியுள்ளார். இது எந்தப் பக்கத்து வழக் காறோ? ஈண்டு ஏகுமின் என்று கூறியதால், உள்நோக்கி வருக என்று கூறியதாகக் கொள்ளவேண்டும். ஏகுதல்' என்பதற்கு நடத்தல் என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு கருத்து இதிலே மறைந்திருப்பதாகக் கொண்டு கம்பருக்குப் பெருமை சேர்க்கலாமா? அதாவது:ஏ இராவணா நீ உள்நோக்கி வரத்தக்கவனல்லன் - வெளியே விரைந்து செல்ல வேண்டியவன் - என்ற பொருள் தொக்கி நிற்கும்படிச் செய்துள்ளார் கம்பர் - என்று