பக்கம்:அறநெறி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. செய்ங்கன்றியறிதல்

எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ங்கன்றி.கொன்ற மகற்கு (110)

பெறுதற்கரிய பிறவி மனிதப் பிறவி, “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே” என்று அப்பரடி களும் தில்லையில் எல்லையில்லாத கூத்து நிகழ்த்தும் நடராசப் பெருமானை வந்தித்து வணங்க மனிதப் பிறவியை வேண்டினார். பிற உயிரினங்களுக்கும் மானிட இனத்திற்கும் உரிய பெரிய வேறுபாடு நல்லது இது தீயது இது என்று பகுத்தறிந்து பார்க்கின்ற சிந்தனையாற்றல்ஆறாவதறிவு மனிதப் பிறவிக்கு மட்டுமே வாய்த்திருப்ப தாகும்.

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பலவாகும். அப்பண்பு கள் அனைத்திலும் தலையாய பண்பு செய்நநன்றியறிதல் என்னும் பண்பாகும்.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாகத் துலங்குகிறது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதில் தான் சமுதாயம் உயிர்த் துடிப்புடன் இயங்க முடியும். ஒருவர் ஒரு காலத்தே தமக்குச் செய்த நன்மையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/42&oldid=586918" இலிருந்து மீள்விக்கப்பட்டது