8я.cит. 91
“எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்” என்றார் தாயுமான தயாபரர்.
திருவள்ளுவர், “பொருள் இல்லார்க்கு இவ்உலகம் இல்லை’ என்று புகன்றார். பிறிதோர் இடத்தில் “செய்க பொருளை’ என்றுகட்டளைப் பிறப்பித்தார். பொருளால் பலவற்றைப் பெறலாம் என்றும் அவர் கருதினார்.
“அருளென்னும் அன்பீன் குழவி, பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு’
என்ற குறள்வழி, பொருள் என்னும் செவிலியால், அன்புத் தாய் ஈன்றெடுக்கின்ற அருள் என்னும் குழந்தையைப் பெறலாம் என்றும் சொன்னார். இந்த வகையில் பொருளே வாழ்வின் முதல் என்றாலும் அதுவே முற்றுமாக ஆகிவிடாது. பொருள் சேர்ப்பதனுடைய பயன் பிறருக்குக் கொடுப்பதாக இருக்கவேண்டும். இதனை,
‘ஈத்துவக்கும் இன்பம்’
என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவார். பிறருக்கு வழங்காமல் தாமே கோடிகோடியாகப் பொருளை அடுக்கி வைத்துக்கொண்டால், அதனால் விளையப்போவது விபரீதங்களும் தவறுகளுமே ஆகும் என்று புறநானூற்றுப் புலவர் நக்கீரனாரும் நலமுற நவின்றுள்ளார்.
‘தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே!