உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறநெறி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6A.t1Ո7, 98

பெருமித வாழ்க்கை என்பது பெரியவர் வாழ்விலே இருந்து நாம் பெறுகின்ற செய்தி ஆகும்.

3. மனைமாட்சியின் மாண்பு

திருவள்ளுவர் ‘மங்கலம் என்ப மனைமாட்சி” என்றார். ஒருவன் பெறுகிற பேறுகளில் தலையாய பேறு குழந்தைச் செல்வம் என்று குறிப்பிட்டார்.

“பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற’

என்றார் அவர். ஆணின் உயிர் கடமையின் மீதே கருத்துக் கொள்கின்றது. பெண்ணின் வாழ்வு கணவனே உயிர் என அமைகின்றது.

‘வினையே ஆடவர்க் குயிரே வானுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’

(குறுந்தொகை :135; 1-2)

என்று குறுந்தொகை குறிப்பிடுகின்றது. அந்த வகையில், இல்லற வாழ்வின் இலக்காக, மையமாக, அசிசாணியாகத் திகழ்கின்றாள் பெண். இதனையே திருவள்ளுவர்.

‘மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்’

எனும் குறள்வழி வாழ்க்கைத் துணையின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறினார்.

செல்வக் குடியில் பிறந்த ஒரு பெண், திருமணமும் ஆகிப் புகுந்தவீடு சென்றாள். புகுந்த வீட்டில் வறுமை வந்து சேர்ந்தது. தேன் கலந்த பாலினைப் பொற் கிண்ணத்தில் ஊற்றிச் செவிலித்தாய் வற்புறுத்திக் குடிச்கச் செய்யவும், அதனை மறு தீது ஒடிஒடித் தன் காலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறநெறி.pdf/95&oldid=587003" இலிருந்து மீள்விக்கப்பட்டது