உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

97


உலகத்துயிர்கள் (ஆன்மாக்கள் பரமர்த்மாவாக விளங்கும் ஆண்டவன் அடியினை உறுதியாக அடைய முடியும். இவ்வாறு பிறரை ஆற்றுப்படுத்தி (வழிப்படுத்தி) ஆண்டவனிடம் அழைத்துச் செல்கிறார் ஆண்டாள் எனலாம்.

இனி இப்பாட்டு செல்வப்பாட்டு (Richest poetry) என்று சொல்லத்தகும் கீர்த்தி வாய்ந்தது என்றும் இயம்பலாம். காரணம் இப்பாட்டில் சிறந்த சொற்கள் சிறந்த இடங்களில் சிறந்த வகையில் அடுக்கப் பெற்றுள்ளன என்று குறிப்பிடலாம் (Best words, in the best place, in the best order). சொல்லாட்சிச் சிறப்பும் (diction) இப்பாடலில் நிரம்பவுண்டு. சுருங்கச் சொல்லின் முன்னர்க் குறிப்பிட்டவாறு மாணுயர் தோற்றத்தை ஆடியில் அடக்கிக் காட்டும் திறல் வாய்ந்த பெற்றித்தாய பாட்டு இதுவெனலாம்.


காட்சி ஓவியம்

அடுத்து, இயற்கைப் பொருளை இயல்பாகக் கிளத்தி, அதன்வழி ஒர் உயர்பொருளை உணர்த்தி, ஓவியம் அன்ன காட்சியினை வடித்து, காவியம் போன்று நெஞ்சில் நிலைக்கச் செய்யும் திறன் ஆண்டாளுக்குக் கைவந்த கலை என்பது பின்வரும் பாட்டால் விளக்கமுறும்.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுத்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

-திருப்பாவை 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/99&oldid=1462095" இலிருந்து மீள்விக்கப்பட்டது