பக்கம்:ஆண்டாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

49


யவர். வ.வெ. சு. ஐயர் அவர்கள் "நாச்சியார் திருமொழி நாயகி பாவத்தின் உச்சி எல்லையை எட்டிப் பிடிக்கிறது" என்பர்.

ஏனைய ஆழ்வார்கள் நாயகி பாவத்தை ஏறிட்டுக் கொண்டு பாடினர். அது மேட்டு மடையையொக்கும். ஆனால் ஆண்டாளோ பெண்ணாய்ப் பிறந்து அவன் அன்பை நாடினாள். இவர் காதல் பள்ள மடையாகும். எனவே, ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சும் தன்மையள் என்று, இவரை உணர்ந்தோர் ஏத்திப் போற்றினர்.

ஆண்டாள் பெரியாழ்வாரின் கற்பனைப் பாத்திரமா?

மூடப்பட்ட பல்லக்கில் கோகையை அமர்த்தித் தொண்டர்களும் அர்ச்சகர்களும், பெரியாழ்வாரும் தொடர, பங்குனி உத்திரத்தன்று அழகிய மணவாளன் அரங்கனின் திருமண்டபத்தை அடைந்தனர். கோதை பல்லக்கிலிருந்து இறங்கித் தமியளாய்த் திருவரங்கப் பெருமாளின் திருவடிகளின் அருகே அமர்ந்து சிறிது நேரத்தில் காரணாராயினர். பெரியாழ்வார் மகளைக் காணாது உள்ளம் கரைந்துருக இறைவன் தாம் கோதையுடன் ஶீ வில்லிபுத்துாரில் காட்சியளிப்பதாகக் கூறினார் பெரியாழ்வாரும் ஆங்குச் சென்று தம் பணியைத் தொடர்ந்து நடத்தி வந்தார் என்பது வரலாறு.

இன்றும் ஶீ வில்லிபுத்தூர் திருக்கோயிலில் மணமகன், போன்று வீற்றிருக்கும் அரங்க மன்னரின் கம்பீரமும், மனத்திற்கிசைந்த மணமகளை வாய்க்கப்பெற்ற புதுப்பெண் போன்று அளப்பரிய மகிழ்ச்சி வெள்ளம் முகத்தில் தவழ எழுந்தருளி இருக்கும் ஆண்டாளின் எழிலும் கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

இங்ஙனம் இருவரும் வீற்றிருக்கும் இருக்கையிலேயே, பெரிய திருவடியும் (கருடாழ்வார்) அமர்ந்துள்ளார். இவ்வமைவு, எல்லாத் தத்துவங்களையும் தன்னுள் பொதிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/51&oldid=958457" இலிருந்து மீள்விக்கப்பட்டது