பக்கம்:அமுதும் தேனும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மங்கையும்

மாவீரனும்


தக்கோலம் என்கின்ற சிற்றுார் தன்னில்

சமரிட்டுப், பழித்தோரைக் கிழித்துக் கொன்று,

கொக்கரித்துக் கொண்டிருந்த சந்தா சாய்பைக்

கொடுவாளால் எச்சரிக்கை செய்து, பின்னர்

எக்காள மிட்டபடி குதிரை வீரர்

எல்லோரும் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு,

வைக்காவூர் வழிநோக்கி விரைந்து சென்றார்.

வாள்வீரன் கான்சாகிப் முன்னே சென்றான்.


நெல்லூரில் ஓரிரண்டு நாட்கள், அந்த

நெருப்புவிழி கான்சாகிப் தங்க லானான்.

செல்லூரில் தேரோட்டம் பார்த்து விட்டுத்

திரும்பிவந்து கொண்டிருந்தாள் மங்கை மாசா.

கல்வீரன் கண்களினால் கோடு போட்டான்.

கட்டழகி கால்விரலால் கோடு போட்டாள்.

வில்வக்காய் தனைக்காட்டிச் சொக்க வைத்தாள்.

விக்கலுக்கு நீர்கேட்டுச் சிக்க வைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதும்_தேனும்.pdf/6&oldid=1461906" இலிருந்து மீள்விக்கப்பட்டது