பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 25.

மேலக் கோபுரத்தருகே ஃபண்டாபீஸில் மணி பன்னிரண்டு அடிக்கும் ஓசை காற்றில் மிதந்துவந்தது. மேலே ராஜாராமன் என்ன சொல்லப் போகிறான் என்று எதிர்பார்த்து எல்லோரும் அவனையே பார்க்கத் தொடங்கி னார்கள். ராஜாராமனைத் தவிர அங்கிருந்த நால்வரில் முத்திருளப்பன் பள்ளி ஆசிரியர்; குருசாமி பாண்டிய வேளாளர் தெருவில் தையற்கடை வைத்திருந்தார்; சுந்தரராஜன், பழநியாண்டி, இருவரும் கல்லூரி மாணவர்கள். ராஜாராமனும் சில மாதங்களுக்கு முன்புவரை அவர்களோடுதான் கல்லூரியில் சக மாணவனாகப் படித்துக் கொண்டிருந்தான். தேசத்தின் அறைகூவலை ஏற்றுக் கல்லூரியிலிருந்து அவன் வெளியேறிச் சில மாதங்கள்கூட ஆகவில்லை. இண்டர்மீடியட் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்த அவன் படிப்பைவிட்டு விட்டுத் தேசிய வேள்வித் தீயில் குதித்ததை அவன் தாயே விரும்பவில்லை. இளமையிலேயே விதவைக் கோலம் பூண்ட அந்த அன்னை, தான் வாழ்ந்த குடும்ப வாழ்வின் ஒரே இனிய ஞாபகமாக எஞ்சி நிற்கும் மகன் மனம் கோணும்படி அவனைக் கண்டிக்க முடியாமல் கவலைப்பட்டாள். .

ராஜா! நீ இப்படிச் செய்திருக்கப்படாது," என்று ராஜாராமனின் தாய் அவன் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டதைப் பற்றி வருத்தப்பட்டபோது, 'ஒரு பிள்ளையைப் பெற்ற தாயாகிய நீயே இப்படிக் கவலைப் படறியே அம்மா கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பெற்றிருக்கும் ஒரு தாய் எவ்வளவு கவலைப்படுவாள் என்று நினைத்துப்பாரு' - என்பதாகப் பதில் சொன்னான் அவன். அந்தப் பதிலை எதிர்த்துப் பிள்ளையிடம் முரண்டு பிடிக்கத் தாயால் முடியவில்லை. அவன் போக்கில் விட்டு விட்டாள். ராஜாராமனைத் தொடர்ந்து கல்லூரியிலிருந்து வெளி யேறுவதாக வாக்களித்திருந்த சுந்தரராஜனும், பழநி யாண்டியும் இதுவரை அப்படிச் செய்யவில்லை. 'சுதேசமித்திரனை மடித்து வைத்துவிட்டு “ஏண்டா, நீங்க ரெண்டுபேரும் எப்ப வெளியேறி வரப் போlங்க?' - என்று சுந்தரராஜனையும், பழநியாண்டியையும் பார்த்துக் கேட்டான்