பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஆத்மாவின் ராகங்கள் புனைவுகளுமே அதிகமாக வரமுடியும். ஒவ்வொரு நாளும் நான் டைரி எழுதுகிறேன். ஆனால், அதையும் என் மனத் திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். நான் உயிரோடிருக்கிற வரை என் வாழ்க்கை வரலாற்றை எழுதக் கூடாது என்பதற்கு இப்போது நான் உன்னிடம் சொல்வதைத் தவிரவும் வேறு காரணங்கள் உண்டு, நீயும் தேசமும் என்னுடைய தியாகங்களுக்கு நன்றி செலுத்துவது போல் மறுக்கமுடியாத சில தியாகங்களுக்காக வெளியே கூற முடியாமல் நான் இதயத்தில் அந்தரங்கமாக நன்றி செலுத்த வேண்டியவர்களும் இருக்கிறார்கள்.

மனத்தினால் எனக்கு நன்றி செலுத்தும் பல்லாயிரம் அன்பர்களிடமிருந்து நான் அதை ஏற்று இடைவிடாமல் என் ஆன்மாவினால் யாருக்கோ நன்றி செலுத்த

வேண்டியிருக்கிறது. இந்த அறுபது வயது வரை குடும்பம்

பந்தபாசம் எதுவுமே இன்றிக் கழித்து விட்ட

என்னை நீங்களெல்லாம் தேசபக்த சந்நியாசி என்று

புகழுகிறீர்கள். என்னை என்னுடைய பொன்னான வாலிபத்தில் சந்நியாசியாக்கியவள் பாரத தேவி மட்டு

மல்ல; இன்னொருத்தியும் இருந்திருக்கிறாள். இதற்குமேல்

என்னால் இப்போது எதுவுமே சொல்ல முடியாததற்காக

என்னை மன்னித்துவிடு ராஜூ. இந்தப் பாரத தேசத்தில்

கங்கையும் இமயமலையும் உள்ளவரை நானும்

சிரஞ்சீவியாக இருந்து பார்க்கவேண்டுமென்று எனக்குப்

பேராசை உண்டு. ஆனால், அது முடியாது. ஒருநாள் நானும்

போகவேண்டியிருக்கும். அப்படி இந்தத் தேசத்தைக்

காண்பதற்கு என்னைவிட அதிகமான பாத்தியதை உள்ள

மகாத்மாவே போய்ச் சேர்ந்துவிட்டார். நான் எம்மாத்திரம்?

ஒரு நாவலின் கதாநாயகனை விடச் சுவாரஸ்யமாக நான்

வாழ்ந்திருக்கிறேன். ஆன்மாவினால் வாழ்ந்திருக்கிறேன்;

அதுதான் ரொம்ப முக்கியம். ஆன்மாவினால் வாழ்ந்த

தலைமுறையின் கடைசிக் கொழுந்து நான். எப்போதாவது

நான் போனபின் என் டைரிகளைத் தேடி எடுத்து வாழ்க்கை

வரலாறு எழுதும் உரிமையை உனக்கு நிச்சயமாகத்

தருகிறேன். இப்போது என்னை விட்டுவிடு.