பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 57 ‘பிரபு இதுக்குள்ளே உங்களுக்கு திருப்பரங்குன்றம் ஞாபகம் வந்துட்டுதா? பூலோகத்தில் இளையவள் மீதுதான் கணவனுக்குப் பிரியம். ஆனால் இங்கேயோ...! முருகனுக்கு, லேசாய் கோபம் வந்தது. மனைவிகள் இல்லாத ஐயப்பன் மீது பொறாமைப் பட்ட படியே, மயிலில் ஏறினான். வள்ளி வையாக் குறையாய் பேசினாள். 'எனக்குத் தெரியுமே. திருப்பரங்குன்றம் ஞாபகம் வந்துட்டால் போதுமே. நீங்கள் என்னைப் பார்த்து. மோகன புன்னகை இருக்கட்டும்....ஒரு சாதாரணப் புன்னகைக்கூட வராதே. ஒங்களைச் சொல்லி குற்றமில்லை குற்றவாளி நான்தான். என் பெயர் விளங்கும் இந்த மலையில். உங்களை அடைவதற்காக... கால்மாட்டில் முளைத்தமரம் தலைமாட்டில் படர. தலைமாட்டில் முளைத்த மரம் கால்மாட்டில் சாய. பல்லெல்லாம் பாசியாக தவமிருந்ததேன் பாருங்கள். அது தவறுதான். தவறேதான்." முருகன், தன் விருப்பத்திற்கு மாறாக, வலிந்து ஒரு புன்னகையை வரவழைத்தபடியே பதிலளித்தான். தேவீ உன் மாமியார் மாதிரியே கோபக்காரியாய் இருக்கிறாயே. கோபத்தை விட்டுவிடு. மோனத்தில் நில். எந்தத் தவ வலிமையால் என்னை அடைந்தாயோ. அந்தத் தவத்தைப் பயன்படுத்தி தொலை நோக்காய் பார். நான் எங்கே போகிறேன் என்பது ஒனக்குச் சொல்லாமலே புரியும். வள்ளி, மனக் கண்ணை மூடி, ஞானக் கண்ணை திறந்தாள். அச்சத்தை முகத்தில் படர விட்டபடியே வேண்டாம். பிரபு. ஐயப்பன் முரடன். குடும்பப் பொறுப்பில்லாதவன். கேளுங்கள் பிரபு. கேளுங்கள் பிரபு...' என்று கணவனைப் பார்த்து கையெடுத்துக் கும் பிட்டபடியே, கெஞ்சினாள். மயிலைப் பார்த்து பறக்காதே என்று சமிக்ஞை கூட செய்தாள். ஆனால்