பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ஆகாயமும் பூமியுமாய்... இருந்து தப்பறவன். போலீஸ்காரங்க கிட்ட மாட்டிக்காம இருக்கறதுக்காக. எப்படி அலைவானோ, அப்படிப்பட்ட நெலமை. அவங்க குற்றம் செய்துட்டு, அப்படி அலையுற நெலமை. இவங்க பிறத்தியார் குற்றத்தால விளையுற நெலமை. சரியா சொன்னே... நீ ஜெயிலுல இருந்து தப்பிச்சுக் கடுங்காவல் தண்டனை கிடைக்குமான்னு பாக்கே. நானு கடுங்காவல் தண்டணையில இருந்து தப்பிச்சு. ஜெயிலு கிடைக்குமான்னு பாக்கேன்." 'என்ன பண்ண முடியும்? நம்மோட உடம்ப மாத்திக்கலாம். ஆனால் உழப்பை மாத்திக்க முடியாதே. அவாள் ஒன்ன அங்கே சேக்க மாட்டா. இவாள் என்னை இங்க. சேக்க மாட்டா. நேக்கு கடுங்காவல் தண்டனையில ஆச இருந்தும் அனுபவமில்ல. எப்படியோ போட்டும். ஒன்னோட இது. திறந்த வெளி ஜெயிலு. என்னோட இது திறக்காத ஜெயிலு. மொத்தத்துல ஜெயிலு ஜெயிலுதான். சரி ஒன்னோட ராமாயணத்தைச் சொல்லு. நான் அப்புறம் என்னோட பாரதத்தை ஒப்புக்கிறேன்." - தோலுரித்த கருணைக் கிழங்கு போல் தோன்றி தன் வயது மூதாட்டியின் முகத்தையே எல்லம்மா பார்த்தாள். மேலும் சிறிது நெருக்கியடித்து அவள் பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். சிறிது யோசித்தாள். பிறகு மடமடவென்று புலம்பினாள். "நல்ல வேளையா. கேட்டே. சாகுறதுக்கு முன்னாடி யாரண்டாயாவது சொல்லிட்டுச் சாகணும்னு நெனச்சேன். மாரிமகமாயி. வாழத் துவங்குறப்போ இருந்த ஆசையை. முடிக்காட்டியும். இப்போ சாகத்துவங்கறப்போ தோனுற ஆசையை முடிக்க ஒன் மூலம் வந்துட்டா' எல்லம்மா தொடர்ந்தாள். 'இருபது வயசுல கல்யாணம். மொதல்ல ஒரு பொண்ணு. பிள்ளையாண்டான் பொறக்கணுங்கற ஜோரில். "அதுவும்" நானுமா, பெத்ததுல, அடுத்தடுத்து