54
ஆகாயமும் பூமியுமாய்…
தோணுது. இப்படி நினைக்க நினைக்க எவ்வளவு சந்தோஷமாய் இருக்குது தெரியுமா?"
எல்லம்மாக் கிழவி சிறிது நேரம் பேசவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்தாள். பிறகு விசாலத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்தாள். துக்கத்தில் உதித்த ஆனந்தத்தோடு அவளும் கத்தினாள்.
"நமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை பாரு.. சத்தியமா அட்சிச் சொல்றேன். இதே எண்ணந்தான் எனக்கும் வருது. வாழ்க்கையில எவ்வளவோ நல்லதும் கெட்டதும் அனுபவிச்சோம். இப்போ மிஞ்சி நிக்கறது வெறும் நெனப்புத்தான். குடும்பத்துக்குள்ளேயே. விடுற இந்த நெனப்ப ஏன் பூலோகத்துல விடப்படாதுன்னு நெனச்சேன். மனசுல ஏதோ ஒண்ணு தட்டுப்படுவது போலத் தெரிஞ்சுது. ஆனால் புரியல. ஒன் பேச்சு புரிய வைச்சுட்டு. இந்த ரோட்டுல. அந்தக் காட்ல, போற அத்தனை பேரும் நான் பெற்ற மவனுவ மவளுவன்னு இப்போ நெனச்சுப் பாக்கேன். எல்லாருமே உறவுன்னு நெனக் கப்போ உபத்திரவமா இருந்த உறவு இது ல கரைஞ்சிடுது. விசாலம்மா... நெசமாக்காட்டியும் சொல்றேன். எனக்கு எவ்வளவு சந்தோஷமாக் கீது தெரியுமா?"
“ஏதோ நம்மோட கர்ம வினையிலும் ஒரு நல்லது நடக்கு. நீ சொன்னப்பல வாழ்வே இறுதியில் ஒரு நெனப்புத்தான். பகவான் கிட்டப் போறதுக்கு. ஈஸ்வரா இனி மேலும் எங்க மேலே கர்ம வினையை ஏவாதேடா"
'நீ சொல்றதுல்ல கடைச பிடிக்கலம்மா. கர் ம வினைன்னு சொல்லி நாம தாயாய் இருந்து செய்ய முடியா விட்டாலும், நினைக்கக் கூடியதை மறந்து டப்படாது. பாரு. எல்லோரும் என் பிள்ளைங்கன்னு நெனக்கப்போ. எனக்குக் கர்ம வினை தோனலை. மனுஷனோட கஸ்மால வினைதான் தோணுது. நம்ம பிள்ளைங்க கூடி வாழ்ற