பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 89. வேண்டியதாப் போச்சு அய்யா, பெரிய மனுஷமாரே வேணு முன்னா.... எங்கண்ணனை, ஒங்க கையால கொன் னு டு ங் க | ஆ னா இப் படி ப் பண் ணா தி ய! கொன்னுட்டிங்கன்னா எங்களுக்கும் ஒரு கவல முடிஞ்சது மாதிரி இருக்கும்." வேல்சாமியின் தங்கை போய்விட்டாள். கிருஷ்ணன், துக்கம் விசாரிப்பவர்போல் "ஆயிரந்தாலும் இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு இவ்வளவு வாய் ஆவாது. கூடப்பிறந்த அண்ணனைப் பேசுற பேச்சா இது!" "அவள வீட்ல போயி என்ன பண்ணுறேன்னு பாருங்க! அங்க விழுவுறது இங்க கேக்கும்படியா அடிக்கப்போறேன்! வேணுமுன்னால் பாருங்க!” "ஏண்டா! அவளுக்கு கல்யாணம் என்னடா ஆயிட்டு?" "அம்மா பாத்துக்கிட்டு இருக்கா" "பேசாம இவன் பெருமாளுக்குக் கட்டலாம்!" "இவன் பெரிய இடமுல்லா பாப்பான்?” "அதுக்கு நானாச்சு.” வாலிபப் பையன் பெருமாள் குறுஞ்சிரிப்பாக சிரித்துக் கொண்டே பேசினான். "நம்மளால, பழகிப் பார்க்காம கட்டமுடியாது." "கம்மா துள்ளாதப்பா. இவன் அதுக்கு ஏற்பாடு பண்ணுவான்." விடலை ராமனுக்கு இது அதிகபட்சமாகத் தெரிந்தது. எனக்குன்னாலும் பரவாயில்ல. இந்தப் பெருமாளுக்கா. சீ. ஒரு குடும்பப் பெண்ணை இப்படியா பேசுறது? அவன் பேச்சை மாற்றினான்.