உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஆத்மாவின் ராகங்கள் நீங்க உடனே நாகமங்கலத்துக்குப் போகணும். போறப்பவே ஆசிரமத்திலே இறங்கி முடிஞ்சா பிருகதீஸ்வரன் சாரையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போங்க. உங்களைப் பார்த்தாலே மதுரத்துக்குப் பழைய உற்சாகம் வந்துடும். அது உருகின உருக்கத்துக்கு எல்லாமே நீங்க தான் காரணம் சார்! என்னமோ இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம். நடந்திருச்சு. கடவுளும் நல்லவங்களைத்தான் இப்பிடி எல்லாம் சோதிக்கிறாரு. மகாலட்சுமி மாதிரி இருந்த பொண்ணு எலும்புந் தோலுமா ஆயிடிச்சு, நீங்கதான் பார்த்துப் பொழைக்க வைக்கணும்' - என்றான் ராமையா. இப்பிடிச் சொல்லும் போது அவனுக்குக் கண் கலங்கி

விட்டது.

பத்தரின் மகன் ராமையாவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாராமன் ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சாயங்காலமாகிவிட்டது. சில வளர்ச்சிகளும் மாறுதல்களும் காலப்போக்கில் நேர்ந்திருந்தன. ஆசிரமம் இருந்த மாந்தோப்புக்கு அருகிலிருந்த கிராமத்தின் ஒருபுறமாகச் சென்ற மெயின் ரோடிலிருந்து ஆசிரமத்துக்குள் செல்ல இரண்டு பர்லாங் தூரத்துக்கு முன்பு ஒற்றையடிப் பாதைதான் உண்டு. இப்போது அந்த இரண்டு பர்லாங் தூரத்துக்கும் செம்மண் சாலை போடப்பட்டிருந்ததை ராஜாராமன் கவனித்தான். -

பிருகதீஸ்வரனும் நண்பர்களும் அவனைப் பார்த்த போது அவனிருந்த கோலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

'என்ன ராஜா இது? ஏன் இப்படி எலும்புந் தோலுமா ஆயிட்டே? ஜெயில்லே உடம்பு செளகரியமில்லாம இருந்தியா?" -