பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 ஆத்மாவின் ராகங்கள்

தங்கள் நினைவிலும் கனவிலும் மட்டுமே இருந்த சத்திய சேவாசிரமம் உருவாகி விட்டதைக் கண்டபோது ராஜாராமனுக்குப் பூரிப்பாயிருந்தது. சுதேசிக் கல்வி அங்கே எப்படி எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் என்று பிருகதீஸ்வரனே காந்தீயக் கோட்பாடுகளை வைத்து ஒரு திட்டம் வகுத்திருந்தார். அவரைத் தவிர வேறு இரண்டு மூன்று தேசபக்தர்களும் ஆசிரமவாசிகளாகி இருந்தார்கள். ஆசிரமத்தின் தேவைகளுக்கான உணவுப் பொருள்கள் அங்கேயே பயிரிடப்பட்டன. நாலைந்து பசுக்கள், தேன் கூடுகளை வளர்க்கும் தேனிப் பண்ணை எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைத்து, உணவு தயாரித்தார்கள். ஒரே பந்தியாக அமர்ந்து, கட்டுப்பாட்டோடு சுத்தமாக உண்டார்கள். உணவுப் பந்தியே ஒரு பிரார்த்தனைக் கூடம் போலச் சிந்தாமல் சிதறாமல், துப்புரவாக இருந்தது. ஒரே சீரான கதர் உடையுடன் ஆசிரமத்துப் பிள்ளைகளையும், மற்றவர் களையும் பார்க்கும் போது ஒரு சத்திய இயக்கத்தை நோன்பாக அங்கீகரித்துக் கொண்டவர்களைப் பார்ப்பது போல் பெருமிதமாக இருந்தது.

அன்று பகலில் ராஜாராமனும், முத்திருளப்பனும் அங்கேயே நீராடி ஆசிரமத்துப் பந்தியிலேயே பகல் உணவு கொண்டார்கள். - - -

'ஆசிரம வேலைகளுக்காக மதுரத்துக்கிட்டப் பணம் வாங்கினதே இப்படி ஒரு சத்திய விரதத்தை நாள் கடத்தாமே தொடங்கறதுக்காகத்தான். அதுக்காக நீ என்னை மன்னிக்கனும்,' என்றார் பிருகதீஸ்வரன்.

"அப்படிச் சொல்லாதீங்க. நீங்க செய்திருக்கிறது பெரிய சாதனை. நான் ஏதோ, எப்பவோ சொன்னதை நீங்க மனசிலே வைச்சுக்கப்படாது, சார்...' என்றான் ராஜாராமன்.

முத்திருளப்பன் மறுநாளிலிருந்து ஆசிரமத்தின் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று பிருகதீஸ்வரன்,