உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

63


செய்தவன். டைரெக்டர் இவனை இழிவு செய்ததற்காக. கொதித்தெழுந்து, இவனுக்காக வாதாடிய கருணாந்தத்தின் மீதே டில்லியில் துஷ்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட கயவனாயிற்றே இவன். நண்பர்களின் உதவிகளையே, அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களாக்கும் அற்பனாயிற்றே இந்த பெருமாள்'

'ஐயப்பா இப்போது பிரச்சினை. நம் பக்தர்களில் எவன் அதிக அயோக்கியன் என்பதல்ல. அது தெரிந்த கதை. ஊரறிந்த விவகாரம். இது என்னுடைய பிரிஸ்டிஜ் பிரச்சனை.'

'எனக்கு மட்டும் பிரிஸ்டிஜ் இல்லையோ...'

முருகன் பதிலளித்தான். 'கறுப்புக் சட்டைக் காரர்களால்.... என் சுயமரியாதைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது.

'அதற்கு வீரமணியைக் கேள். நான் என்ன செய்வேன்'

"நான் வீரமணியின் ஆட்களைச் சொல்லவில்லை. உன் கறுப்புச் சட்டைக்காரர்களைச் சொல்கிறேன். என்னுடைய கோவில் எக்ஸிகியூடிவ் ஆபீஸரே. என் சந்நிதியில். உனக்காக மும்முடி கட்டுகிறான். என் பக்தனே ஐயப்பா என்று சொன்னபடியே. கறுப்பு உடையோடு என்னை அர்ச்சிக்கிறான். ஐயப்பன் கொடுப்பதை. முருகனால் கொடுக்க முடியாது என்ற ஒரு எண்ணம் என் பக்தர்களுக்கே ஏற்பட்டுள்ளது. இது அப்பட்டமான டிபெக்ஷன். பாரதத்தில் பொலிடிக்கல் டிபெக்ஷனைத் தடுக்க சட்டம் வந்திருப்பது போல் இந்த தேவலோகத்திலும் ஒரு சட்டம் வரவேண்டும்."

'இங்கேதான் தப்பு செய்கிறாய் முருகா. சட்டசபை அல்லது பார்லிமெண்டில் ஒரு கட்சியில் மூன்றில் ஒரு பங்கு, பிரித்தால் அது டிபெக்ஷ ன் அல்ல பிளவு. கட்சிப்பிளவு. இங்கேயும் நாம் காண்பது டிபெக்ஷன் அல்ல. பிளவு. பக்திப் பிளவு. சவாலிடுகிறேன். சட்டம் கொண்டு வரலாமா...'