உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தொழிலாளரும் இந்தத் தொழில் அரசாங்க அதிகாரிகளும் இந்தச் சட்டங்களின் விதிகளைக் காட்டி நிறுவன உரிமையாளர்களுக்குத் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் தொழில் நடத்துவதையும் நிறுத்திவிடுகின்றனர்.

அதே போல இந்தக் குப்பை ஒதுக்கீடு சட்டம் போட்டால் என்ன ஆகும்? நம் கோர்ட்டுகளில் இட நெருக்கடி அதிகமாகிவிடும். நாமே நாம் மெல்ல மெல்லப் புறத்தூய்மை வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு உதவுவதல் நலம் பயக்கும். நடவடிக்கைகள் எடுக்க மற்றவை எல்லாம் சீர்பட்ட பிறகே இதையும் சீர்படுத்த முடியும்.

முதலில் சாலைகளே இங்கு இன்னும் ஒழுங்காக அமைக்கப்படாமல் இருக்கும்போது அவற்றின் புறத்தூய்மை பற்றி எப்படிப் பேசமுடியும்; நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; முழுமையும் ஓரளவு நிறைவு பெற்றே இப்புறத்தூய்மையை நாமும் காணமுடியும். புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். வைத்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை அந்த நாடுகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.

பசுமை தூய்மை இந்த இரண்டும் அந்த நாட்டில் காணப்படும் பெருமை. எங்கும் பசுமையாக வளரும் செடிகள், புல் தரைகள், பெரிய மரங்கள், பூங்காக்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. லண்டன் மாநகரில் ஆங்காங்கே பூங்காக்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைச் சுற்றி மாடவீதிகள் {Square) என்ற பெயரில் வழங்குகின்றன. நம் நாட்டில் கோயில்களைச் சுற்றி மாட வீதிகள் அமைவது போலப் பூங்காக்களைச் சுற்றி வீதிகள் அமைகின்றன.