உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

-றுள்ளது. ‘டைனிங்க் டேபிள்’ சுற்றியும் நாற்காலிகள் இந்த அமைப்பு நகர வீடுகளில் கிராமிய உயர் நிலை வீடுகளில் இடம் பெற்றுள்ளது. மேலை நாட்டு நாகரிகப் போக்கு என்பது சொல்லத் தேவை இல்லை.

உடுப்பது அவர்களுக்கு அவசியமான ஒன்று; மானத்தைக் காக்க மட்டுமல்ல; குளிரினின்று தற்காப்புப் பெற: மற்றவர்கள் தம்மைப் பார்க்கும்போது மகிழ்வு ஊட்ட; ‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ இது தமிழரின் ஞானிகளின் சிந்தனைப் போக்கு; நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு இது ஏற்கலாம்; அங்கு உடம்பு முழுதும் பருத்தி ஆடை.யால் அல்ல; கம்பளி ஆடையால் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்; பெண்கள் ஆண்களைப் போல் கை வெட்டு கால்வெட்டு இவற்றோடு கூடிய சட்டைகளைக் கால் அங்கிகளை மாட்டிக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு ஆண்களைப் போல நடக்கப் பழகச் சாதகமாக உதவுகிறது. பதினாறு முழம் புடவையில் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் நிலையில் நம் புடவைகள் பயன்படுகின்றன. இந்த ஆடையில் நம் பெண்கள் அங்குச் செல்லும்போது அவர்கள் வியப்பாகப் பார்க்கின்றனர். நம் நாட்டுத் தையல்கள் தையல்காரரிடம் அதிகம் போகத் தேவையில்லை; ஜாக்கெட் பிளௌஸ் இதற்கே நடையாய் நடக்கவேண்டியிருக்கிறது.

நம் நாட்டைப் போல் தையற்காரர்கள் அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் தயார் (Readymade) செய்யப்பட்டவை; அவரவர் வயது, உயரம், அளவு இவற்றைக்கொண்டு அங்காடிக்குச் சென்றால் இந்த அளவுக்கு இந்த உடை என்று அட்டவணை காட்டப்படுகிறது; அந்த அளவு (Size) சொன்னால் நம் உடையை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். அவை ‘ஹாங்காங்’ போன்ற இடங்களில் பெருமளவில் தைத்துக் கொணரப்படுகின்றன,