பக்கம்:அருளாளர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 அருளாளர்கள்

என்றும்

‘பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே

Lou’ (நாலா. 2736)

‘என்றும்,

‘எந்தாள் உன் அடிக்கண் அடியேன் மேவதே?

(நாலா: 2738)

என்றும்,

‘உன்பாதம் காண நோலாது ஆற்றேனே”

(நாலா: 2739)

என்றும் கதறும் நிலை ஏற்படுகின்றது. இத்துணைக் கதறலுக்குப் பிறகு அவன் வருவது போன்று தெரிகின்றதாம். வந்துவிட்டான் என்று மகிழும் நேரத்தில், அவன் இன்னும் வரவில்லை என்று தெரின்றது. இது எவ்வாறு தெரிகின்றது? உள்ளத்துள்ளே இறைவன் புகுந்தால் ஏற்படக் கூடிய இன்பம் அல்லது நிறைவு ஏற்படவில்லை போலும்! என்றாலும் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஏற்ப ஏற்பட்ட இன்ப உணர்வு அவன் வந்து தன்னுள் நிறைந்துவிட்டானோ என்று ஐயுறத்தக்க ஒரு நிலையை உண்டாக்கிவிட்டது. எனினும் அந்த இன்பம் முழுத்தன்மை பெறவில்லையாகலின் வருவதுபோல அவன் வாராதொழிந்தான் என்பதை ஆழ்வார் அறிகின்றார்.

நோலாது ஆற்றேன் உன் பாதம்

காண என்று . . . . .

மாலாய் மயக்கி, அடியேன்பால் வந்தாய் போலே வாராயே

(2740 :mibm6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/77&oldid=1291996" இலிருந்து மீள்விக்கப்பட்டது