பக்கம்:அருளாளர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் . 65


பிறரை விட்டுத் தம்மை மட்டும் இறைவன் ஆட்கொண்டதை ஆழ்வார் கூறி வியப்படைவதுபோலவே மணிவாசகரும் கூறி வியப்படைகின்றார்.

‘வெள்ளந்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர்

பெருமானே! எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப்

பதைத்து உருகும் அவர்நிற்க, என்னை ஆண்டாய்க்கு உள்ளந்தாள் நின்றுச்சி அளவும் நெஞ்சாய்

உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் -

கண்ணினையும் மரமாம் தீ வினையினேற்கே’

(திருமுறை: 8, 3, 1)

இறைவன் பெயரைக் கேட்ட மாத்திரையில் உருகுகிறவர் களை விட்டு விட்டு என்னை வந்து ஆண்டாயே! அதை நினைந்து நன்றிப் பெருக்கால் என் உடம்பெல்லாம் நெஞ்சாயிருந்து உருக வேண்டாவா? உடம்பு முழுவதும் கண்ணாய் இருந்து கண்ணிர் பெருக வேண்டாவா? என்று பேசுகிறார். மேலும் அந்த வியப்பு அடங்காமையின்,

‘கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் ...................................... நனவே எனைப் பிடித்து ஆட் கொண்டவா”

(திருமுறை: 8, 11, 10)

என்றும் பேசுகிறார் மணிவாசகர். அன்றியும்,

‘தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னைச் - சங்கரா ஆர்கொலோ சதுரர் (திருமுறை 8, 22, 10)

என மணிவாசகரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/74&oldid=1291464" இலிருந்து மீள்விக்கப்பட்டது