பக்கம்:அருளாளர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 * அருளாளர்கள்


நல்வழியில் திருப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும்பொழுது பிறருடைய உதவியை நாட வேண்டும்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியபடி,

“கங்கையில் புனிதமாய காவிரி நடுஉ பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந்தன்னுள்
எங்கள்மால் இறைவன்ஈசன் கிடந்ததோர்

கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே!”
(நாலா:894)

என்ற நிலையில் கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிக்கும் வரைக் கண்களை வெறுப்பதில்லை. ஆனால் வேறுபொருள்களின் நாட்டங்கொண்டு கண்கள் அவற்றின் மேல் செல்கையில் கண்களை வெறுக்கின்றனர்.

‘உன் பாதயங்கயம் நண்ணிலாவகையே நலிவான்

(நாலா: 2744)
‘உன் அடிப்போது நான் அணுகாவகை செய்து போதி

கண்டாய்”

(நாலா : 2747)

என்ற நிலையில் புலன்கள் துன்பஞ் செய்யும் பொழுதுதான் இறைவனை வேண்டி அவனருளால் இவற்றைத் திசை திருப்ப முயல்கின்றனர்.

இதே பொறிபுலன்கள் இப்பெரியோர்களின் எண்ணத்திற்குக் கட்டுப்பட்டு அவர்கள் ஏவல்வழி நிற்கையில் அப்பொறிப்புலன்களையே வாழ்த்துகின்றனர்; அங்ஙனம் அடங்கிப் பணி செய்யும் அவற்றைத் தமக்குத் தந்த இறைவனின் கருணையையும் எண்ணி நன்றி பாராட்டுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/105&oldid=1291680" இலிருந்து மீள்விக்கப்பட்டது