உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

(4) கலப்பு மணம், விவாகரத்து, மறுமணம், விதவை மணம் இவற்றைச் சமுதாயம் நியதிகளாக அங்கீகரிக்குமா?

(5) சிறு தவறுகள், பாலியல் சந்திப்புகள், காதல் தோல்விகள் இவற்றால் ஏற்படும் தற்கொலைகள் குறையுமா?

(6) பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் வாழ்க்கைச் சிக்கல்கள் நீங்குமா? இந்த அடிப்படைகள் ஒழியுமா?

இதுபோன்ற சமூகப் பிரச்சனைகள் இப்பொழுது எழுந்துள்ளன. இவை நீங்கிய நிலையில் வாழும் மேல் நாட்டு உரிமை வாழ்வு நம்மவர்க்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அனுபாவம் உடையவர்கள் முற்போக்குச் சிந்தனைகளுக்கு மேல் நாட்டு வாழ்வியலை எடுத்துக்காட்டாகக் காட்டுவது மரபாக உள்ளது. நாம் என்னதான் கலப்படமற்ற இந்திய கலாச்சாரம் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முயன்றாலும் மேலை நாட்டு வாழ்வியல் முறைகள் நம்மைத் தாக்கிவருகின்றன. தேவையானவை, வளர்ச்சிக்குரியவை கொள்ளப்பட்டு மற்றலை எள்ளப்பட்டுப் புதிய மாற்றங்களுக்கு இடம் தருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆங்கிலம் மேல் நாட்டுப் போக்குகளை அந்த நாட்டுத் தற்கால இலக்கியம் வழியாக அறிவித்து வருகின்றன.

இன்று பல பத்திரிகைச் செய்திகள் படிக்கிறோம், ஒன்று அவளாகத் தன்னை எரித்துக் கொள்கிறாள்; அல்லது திட்டமிட்டு அந்த வீட்டார் அவளைத் தொலைத்துக்கட்டுகிறார்கள். இது நியாயமா? இதற்கு வழி என்ன? எல்லை மீறும்போது விவாக ரத்து செய்து கொள்வது தான் வழி; அது செய்துகொண்டால் போதாது; இளை