பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஆத்மாவின் ராகங்கள் மதுரத்தோட வீட்டை யார் இடிச்சுப் புதிதாகக் கட்றாங்க...? மதுரம் எங்கே இருக்கு இப்ப?"

'நீங்க போனப்புறம் என்னென்னமோ நடந்து பேர்ச்சு சார் உள்ளர வாங்க சொல்றேன்." -

ராஜாராமனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் ராமையாவோடு கடைக்குள் சென்றான். பட்டறை, வேலை செய்யும் ஆட்கள் எல்லாரையும் கடந்து பின்புறம் ஒழுகறைப் பெட்டி, பூஜைப்படங்கள் எல்லாம் வைத்திருந்த அறைக்கு ராஜாராமனை அழைத்துக் கொண்டு போனான் ராமையா. அந்த அறையில் தரை மேல் பாய் விரித்திருந்தது. ஒழுகறைப் பெட்டி, கணக்குப் பிள்ளை மேஜை, தராசு, தங்கம் உறைத்துப் பார்க்கும் கல் எல்லாம் வைத்திருந்த இடங்கள் போகப் பாயில் இரண்டு பேர் தாராளமாக உட்கார்ந்து பேச இடம் இருந்தது அங்கே.

'ரொம்பக் களைப்பாகத் தெரியlங்க சார்? பையனை காப்பி பலகாரம் வாங்கியாறச் சொல்றேன். முதல்லே சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசுவோம், '- என்ற ராமையா விடம் ராஜாராமன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இட்லி, வடை, சுக்குமல்லிக் காப்பி எல்லாம் வந்தது. ராஜாராமனால் அப்போதிருந்த மன நிலையில் அவற்றை ருசித்துச் சாப்பிட முடியவில்லையானாலும், ராமையாவின் பிரியத்தைக் கெடுக்க மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டுக் கை கழுவினான். என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் தவித்துக் கொண்டிருந்ததால், இட்லி காப்பியில் சுவை காண முடியவில்லை. சிறிது நேரம் தான் சொல்ல வேண்டியவற்றை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்லுவதென்று தெரியாமல் ராமையா தயங்கினான். பின்பு ராஜாராமன் கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைக்கவே தன்னால் சொல்ல முடிந்த படி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் ராமையா.