பக்கம்:அருளாளர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 அருளாளர்கள்

ஆண்டுகளாகவே இவ்விரிவை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். இவைகளின் விரிவு வேகத்தைக் கணக்கிட்டே அண்டத்தின் விரிவை அறிகிறோம்”.

அண்டம், அதிலுள்ள உண்டைகள், அவற்றின் விரியும் இயல்பு என்பவைபற்றி மணிவாசகனார் கூறியன போக இன்னும் எத்தனையோ உண்மைகளும் கூறப்படுகின்றன. பருமைக்கு உதாரணமாக இவ்வண்டத்தைக் கூறி இறைவன் இதனைவிடப் பெரியோன் ஆகலின் அவன் பெருமையை நோக்கக் கற்பனைக் கடங்காத இவ்வண்டமும் துன் அணுவை ஒப்பச் சிறியதாய்விட்டது என்கிறார். அண்டத்தைப்பற்றி அவர் அறிந்திருந்தது போலவே அணுவைப்பற்றியும் அறிந்திருந்தார். இவ்விடத்தில் அணுவுக்குத் 'துன் அணு'என்ற அடைமொழி தரப்பட்டுள்ளது. இனி மற்றொரு பாடலில் அணுவும் பிரிந்து சிறிதாம் தன்மை பேசப்படுகிறது.'இன்று எனக் கருளி' என்று தொடங்கும் 'கோயில் திருப்பதிகம்' ஏழாம் பாட்டில்

‘சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்”

என்று பாடிச் செல்கிறார். மேலும்

‘அணுத்தரு தன்மையில் ஐயோன் காண்க

(அண்டப் பகுதி-4) என்றும் பேசுகிறார். ஒரு காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகிய டால்டன் (Hugh Dalton) என்பார்,

  • Space has no definite volume, for it is continually expanding.” It has been known for some years that they are scattering apart rather rapidly and we accept their measured rate of recession as a determination of the rate of expansion of the world.’ --Limitations of Science, Page 12.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/59&oldid=1291463" இலிருந்து மீள்விக்கப்பட்டது