பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஆத்மாவின் ராகங்கள் துஷ்டி கேட்டார். பிருகதீஸ்வரன் வாசகசாலையில் இல்லை. அவர் ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கி சில வாரங்களுக்குமேல் ஆவதாக, மதுரமும் பத்தரும் தெரிவித்தார்கள். - -

'நீங்களும் அங்கே போய் ஆசிரமத்திலேயே தங்கி விடக்கூடாது. இங்கே தான் இருக்கணும். இல்லாட்டா நான் இந்தத் தனிமையில் உருகிச் செத்தே போவேன், ' என்று மதுரம் ராஜாராமனிடம் முறையிட்டாள். -

அவன் அவள் வேண்டுகோளை மறுக்கும் சக்தி யற்றவனாக இருந்தான். அடிமையாகிற சமர்ப்பண சுபாவத்துடனும், அடிமையாக்கி விடுகிற பிரியத்துடனும் எதிரே நிற்கும் அந்த செளந்தரியவதியிடமிருந்து மீள முடியாமல் தவித்தான் ராஜாராமன். முத்திருளப்பன் ரயிலிலிருந்து இறங்கி நேரே வடக்குச் சித்திரை வீதிக்கே வந்திருந்தாராகையினால், ராஜாராமனிடமும், மதுரத்திடமும் சொல்லிக் கொண்டு பகல் சாப்பாட்டுக்குப் பின் தம் வீட்டுக்குப் போனார். முத்திருளப்பன் போனபின் தனியே அவனிடம் ஏதோ பேச வந்தவர் போல் மேலே வந்த பத்தர், தம் பேச்சை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாத மாதிரி தயங்கித் தயங்கி நின்றார். அவருடைய குறிப்புப் புரிந்து ராஜாராமன்ே அவரைக் கேட்டான். -

'என்ன சமாசாரம் பத்தரே? சொல்ல வந்ததைச் சொல்லுங்களேன்...' - - -

"ஒண்னுமில்லிங்க தம்பி.

"சும்மா சொல்லுங்க...'

'பெரியம்மாவும் போயாச்சு இனிமே நீங்கதான் அதை ஆதரவா கவனிச்சுக்கணும்..." - - -

, so &. : ; 3. .

அவருடைய வேண்டுகோள் மிகவும் கனிவாயிருந்தது. மதுரத்தைக் கவனித்துக் கொள்ளும்படி அவர் தனக்குச்