உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

யைத் தடுத்தல்; மதிக்காத தன்மை இவற்றின் காரணமாகத்தான் இந்த விவாகரத்துகள் ஏற்படுகின்றன.

அங்கே ‘அழகுக் குறைவு’ என்ற காரணம் ஏற்படுவதற்கு இல்லை; திடீர் என்று ஒரு பேரழகனைக் கண்டு மறு விவாகம் செய்ய நினைக்கிறாள் என்றும் கூறமுடியாது . இதற்கெல்லாம் காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது, இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற நிலைக்குப் போகும்போதே இந்த விவாக ரத்து கோரப்படுகிறது.

நம் நாட்டில் சினிமா நடிகைகள் நீடித்த மணவாழ்வு சில சமயம் நடத்த முடியாமல் போகிறது. அவள் சாதாரணமாகப் பெண் என்பதை விட ‘நடிகை’ என்று ஆகும் போது அவளுடைய முழுமை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. கணவன் நடிகனாக இருந்தால் அவன் புதுமை நாடி சலிப்பின் காரணமாக அவளைக் கைகழுவிவிடுகிறான்; குடும்ப நிர்ப்பந்தத்தின் காரண மாகவும் அவன் சராசரி மனிதனாகிவிடுகிறான்.

நடிக்கும்போது அவள் மற்றவர்களிடம் சிரித்துத்தான் ஆக வேண்டும்; உடம்பு அவளுக்கு உரிமை உடைமை என்று கூறமுடியாது. அவள் பாத்திரமாக மாறும்போது அவள் எப்படி அவளாக இருக்க முடியும். கதையின் இயக்கம் அவளிடம் அதிகம் எதிர்பார்க்கிறது. வாய்ப்புகள் ஏற்படும்போது வசதிகள் இருக்கும்போது தடுப்புகள் இல்லை என்று ஆகும்போது ‘இப்படியும் வாழலாம்’ என்று நினைக்கவும் செயல்படவும் முடியும்போது தன்னை ஒருவனிடம் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சம்பிரதாயம், கட்டுப்பாடு அவளை விட்டு விலகுவது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்று; அவள் விவாகரத்து செய்து கொண்டால் கவலை இல்லை;