பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

89


பார்த்துச் செவ்விய இறால் மீனைக் கவ்விய சிறு வெண் காக்கை இரையைக் கொண்டுவந்து, பரவிய பெரிய குளிர்ந்த உப்பங் கழியில் துழாவித் தான்் விரும்பும் பசிய காலையுடைய தன் பெடையை அழைத்து அதற்குக் கொடுக்கும்படியான சிறிய பூவையுடைய ஞாழல் துறையும் எனக்கு இனிமையாய் இருந்தது. ஆனால் சேர்ப்பன் கைவிட்ட பின் அத் துறையும் இனிமை அற்றதாயிற்று. பெரிய வருத்தமடைந்த நெஞ்சத் தோடு பல பல நினைந்து யானும் இவ்வாறு ஆயினேன்" என்று தலைவி மனக்கவலையுடன் தோழிக்கு உரைத்தாள்

175. ஏனோ பசந்தன விழிகள்? பொங்கு திரை பொருத வார் மணல் அண்டகரைப் புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, கொள்ள நரம்பின் இமிரும் பூசல் இரை தேர் நாரை எய்தி விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்றே; கண்டிசின் தெய்ய, உழையின் போகாது அளிப்பினும், சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ? - மகிழ்ந்தோர் கட்களி செருக்கத்து அன்ன காமம்கொல்? - இவள் கண் பசந்ததுவே!

- அம்மூவனார் நற் 35 “மேலெழும் அலைகள் தாக்கிய, நீண்ட மணல் பரந்த கரையிலே புல்லிய காம்புடைய நாவலின் கரிய கனி, களி பொதிந்த மேற்புறமுள்ளதொன்று உதிர்ந்தது அதைத் தும்பி வண்டுகள் தம் இனம் எனக் கருதி மொய்த்தன பல கால்களையுடைய அலவன் என்னும் நண்டு அதனைப் பழம் எனக் கருதிக் கைக் கொள்ளச் சென்றது. அக் கொள்ளுகைக்கு வண்டுகள் வருந்தி கைக் கொள்ள விடாமல் யாழ் நரம்போசை போல மிக்கு ஒலித்தன அந்த ஆரவாரத்தை அங்கே இரை தேடும் நாரை கேட்டுக் கனி கிடக்குமிடம் அடைந்து பூசலைத் தீர்த்தது. அவ்வாறாய கடற்துறை மிக்க மாந்தை