பக்கம்:அங்கும் இங்கும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

வில்லை. குடிக்க நீரில்லை, பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தவர் இலட்சக்கணக்கில். போராடி மடிந்தவரும். இலட்சக்கணக்கில். ஆயினும் சரணடையவில்லை லெனின் கிராட். வெந்நீரில் தோல் வாரைப் போட்டுக் காய்ச்சி: குடிக்கும் நிலைக்கு வந்தபோதும், கலங்காது. தாக்குப்பிடித்து கூடி நின்று, போராடி, கடைசியில் வெற்றியும் கண்டது லெனின் கிராடு. பதினைந்து இலட்சம் மக்களை இழந்து சரணடையாது நின்று வென்றது என்று லெனின் கிராட் வாசிகள் பலர் பெருமிதத்தோடு எங்களிடம் கூறினர்.

‘விதந்தரு கோடி யின்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்ற சுதந்திர கீதத்திற்கு இலக்கணமாக விளங்கிய அந்நகரவாசிகள் தலைநிமிர்த்து நிற்க உரிமை பெறாவிட்டால் வேறு எவரே உரிமை உடையவர்கள் !

‘சொந்த அரசியலும் புவிச்சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாமோ கிளியே, அலிகளுக்கின்ப முண்டோ! ஆம் அதோ பாரதியாரின் குரல் கேட்கிறது, கேளுங்கள்: உற்றுக் கேளுங்கள் உணர்வு பெறுங்கள்.