திருமுகச் செவ்வி 39
இந்தப் பாட்டில் உள்ள முதல் கருத்து. இராமனுடைய திருமுகத்தை முன்பு, பின்பு, அப்பொழுது என்று மூன்று கிலைகளில் கண்டு, தாமரையை ஒத்திருந்த சிலைகள் இரண்டு, வென்ற கிலே ஒன்று என்று கூறுகிருன். இது இரண் டாவது கருத்து. அவ்வளவு பொலிவு உண்டாவதற்குக் காரணம் இராமபிரானுடைய அகமலர்ச்சியாகிய அருங் குணம் என்று குறிப்பாகப் பெற வைத்திருக்கிருன்; இது மூன்ருவது கருத்து. இந்த மூன்று கருத்துக்களையும் நினைக்கச் செய்த பாட்டு முழுவதும் வருமாறு:
இப்பொழு தெம்ம ஞேரால்
இயம்புதற் கெளிதே? யாரும் செப்பருங் குணத்தி ராமன்
திருமுகச் செவ்வி கோக்கின் ஒப்பதே முன்பு, பின்பு: அவ்
வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தா
மரையினை வென்ற தம்மா! : (எம்மனேரால் - என் இனத்தவர்களால். எளிதே - எளி தாகுமா? செவ்வி - அழகு. முன்பு ஒப்பதே, பின்பு ஒப்பதே. அவ்வாசகம் - கைகேயி சொன்ன வார்த்தை. உணரக் கேட்ட - அவள் சொன்ன சொல் ஒவ்வொன்றை யும் தெளிவாக உணரும்படி கேட்ட கேட்ட என்ற பெய ரெச்சம் அப்பொழுது என்பதில் உள்ள பொழுது என் பதைக் கொண்டு முடிந்தது. முன்பு பின்பு அலர்ந்த செக் தாமரையினே ஒப்பதே; அப்பொழுது வென்றது என்று கூட்ட வேண்டும்.)
1, organ, சூழ்வினைப் படலம், 108