;14 அழியா அழகு
தோளேயும் தாளேயும் தடக்கையையும் பார்த்தார்களே யன்றிக் கண்ணேப் பார்க்க வில்லை. பார்க்கும் பாக்கியம் சீதைக்கே இருந்தது. வேறு ஒருவருக்கும் அந்த உரிமை இல்லை. அதனல் வடிவினே முடியக் கண்டவள் அவள் ஒருத்தியேதான்.
ஐயனை அகத்துவடி வேயல புறத்தும் கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள் என்று அவள் திருமணத்தின்போது இராமனது வடிவு முழுதுணர்ந்த காட்சியைச் சொல்கிருன் கவிஞன்.
இந்த எண்ணங்களே யெல்லாம் சிந்தையில் தேக்கிக் கொண்டு மிதிலே மகளிர் செயலைச் சொல்லும் பாட்டைப் பார்க்கலாம்.
தோள்கண்டார் தோளே கண்டார்;
தொடுகழற் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார்;
தடக்கைகண் டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணுர் யாரே
வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்ஞன்
உருவுகண் டாரை ஒத்தார். கம்பன் இராமனுடைய எழிலின் பெருமையை இதன் . கண் கூறினன் என்று சொல்வதா? மகளிர் தாம் அறிந்து கொண்ட முறையில் அவன் அழகைக் கண்டார்கள் என்பை த உணர்த்துகிருன் என்பதா? பல சமயங்களும் அருளதுபவம் பெறுவதில் ஒப்பானவை என்ற சமரசக் கருத்தைப் புலப் படுத்துகிருன் என்பதா? சீதையின் பெருமையையும் உரிமையையும் நுட்பமாகக் குறிப்பிடுகிருன் என்பதா? எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்வதுதானே முறை?
1. கோலங்காண். 37.