வடிவு கண்டவர் 7
செல்லும்போது அவனுடைய பேரெழிலக் கண்டு மடங்தை மார் மயங்குகின்றனர். இந்தக் காட்சிகளை உலாவியம் படலம் என்ற பகுதியில் விரிவாகச் சொல்கிருன் கம்பன். காப்பியங்களில் தலைவன் உலா வருவதை வருணிப்பது மரபு. அந்த மரபை இந்த இடத்தில் கம்பன் பயன்படுத்திக் கொள்கிருன். தனித் தனியே மகளிர்பால் உண்டான மெய்ப்பாடுகளையும் அவர்கள் செயல்களையும் பல பாடல் களில் கவிஞன் சொல்கிருன். ஒரு பாட்டில் தொகுத்துச் சொல்கிருன். அது தமிழ்நாட்டில் கிறைய அடிபடும் பாட்டு.
தோள்கண்டார் தோளே கண்டார்;
தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளே கண்டார்:
தடக்கைகண் டாரும் அஃதே! வாள்கொண்ட கண்ணுர் யாரே
வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்னுன்
உருவுகண் டாரை ஒத்தார். ' (தொடுகழல் - கட்டிய வீரகண்டையையுடைய, அஃதே. அதனேயே கண்டார். ஊழ் - முறை.)
இராமனுடைய தோளையும் தாளையும் கையையும் தனித்தனியே கண்டவர்கள் அதனதன் பேரெழிலிலே ஆழ்ந்து அப்படியே கின்றுவிட்டார்கள். தம்முடைய கண்ணில்ை அளந்து எல்லே காணுமல் அந்த எழிற் கடலிலே ஆழ்ந்து போனர்கள். ஒன்றின் அழகை முழுவதும் கண்டபிறகல்லவா மற்ருென்றைக் காண இயலும்? தோள் முதலியவற்றில் ஒவ்வொன்றும் தன்னிடம் வாங்கிக்கொண்ட கண்களைப் பிறிதொன்றிற் செல்லாதவாறு தன் எல்லேயற்ற அழகில்ை தடுத்து கிறுத்திவிட்டது. .
1. உலாவியற். 19.