உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமிர்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய் உள்ளத்தின் பாச எல்லைக்கு அளவுக் கோடு கிழிக்கவே, முடியாது, அடிக்கும் கைக்ளே அணைக்கவும் செய்கின்றன. அவள் பெற்றவள்; பெற்ற மனம் பித்து!

கை அணைத்தது!

ப்போது கிணற்றிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்ததும், அவள் கண்ட காட்சி அவள் மனதை அப்படியே நிலை தடுமாறச் செய்துவிட்டது. அந்தக் குழந்தை, கையில் பிரித்து வைத்திருந்த, ஜரிகை கவுனை முன்னும் பின்னுமாகத் திருப்பி அழகு பார்த்துக்கொண்டிருந்தது, தான் அணிய வேண்டிய சட்டைதானே, என்ற எண்ணம் போலும்! பச்சைக் குழந்தையின் பால் வழியும் முகத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ஆனால், பூங்கொடியின் உள்ளமோ குமுறிக் கொந்தளிக்க ஆரம்பித்தது.

அந்த ஒரு கண நேசத்தில் என்ன நடந்ததென்பது அவளுக்கே தெரியாது. மறு கணம் தரையில் சுருண்டு கிடந்த தன் மகள். வீறிட்டு அலறுவதைக் கண்டதும், பெற்ற மனம் பதைபதைத்து விட்டது. தன் மகளின் முகத்தைப் பார்த்தாள்..அவள் உயிரே போய்விடும் போலாகிவிட்டது. ஐந்து விரல்களும் அப்படியே அதன் கன்னத்தில் ஆழப் பதிந்திருந்தன. அச்சமயம்... அவள் செய்த அடாத செயல் அவளது தளர்ந்திருந்த மனதைப் பிளந்துவிடும் போவுச் செய்து விட்டது.

சரோஜாவின் அழுகை சப்தம் கேட்ட கந்தன், கைவேலையை அப்படியே போட்டுவிட்டு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடி வந்தான். குழந்தையின் கண்கள் அழுத-

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/66&oldid=1319078" இலிருந்து மீள்விக்கப்பட்டது