வியப்பும் உருக்கமும் 131
பரதன. எழு - இரும்புத் தூண். என்னை - என்ன காரணத் தால், என்ன - என்று குகன் கேட்க1
அதற்குப் பரதன் விடை கூறினன். அந்த விடை .யில் அவனுடைய பணிவும் இராமன்பால் அவனுக்கு இருந்த அன்பும் சேர்மையும் புலனுகின்றன. "அரசை இழந்து இராமன் காட்டுக்கு வந்து விட்டான். கான் மீட்டும் அவனுக்கே அதைக் கொடுப்பதற்காக அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்று பரதன் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னல், அவன், தான் ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் செய்ய வந்திருப்பதைச் சொன்னதாக முடியும். ஆகவே அப்படிச் சொல்லவில்லை. 'என் தந்தை முன்னுள்ள பெரிய வர்களின் மரபினின்றும் வழுவிவிட்டான். அந்த வழுவைப் போக்குவதற்காக அரசனே அழைத்துவரப் புறப்
பட்டேன்' என்று சொன்னன்.
'முழுதுல களித்த தங்தை
முந்தையோர் முறையி னின்றும்
வழுவினன் அதனை நீக்க
மன்னனைக் கொணர்வான்' என்ருன். '
'உலகம் முழுவதையும் பாதுகாத்த தங்தை பழைய மரபினின்றும் வழுவினன்' என்று வழக்கைக் கூறி, அந்த வழக்கைத் தீர்க்க அரசனே அழைத்து வருவதற்குப் புறப் பட்டதாக அல்லவா சொல்கிருன்? இராமன் எங்கே இருந்தாலும் அயோத்திக்கு அரசன்தான் என்ற எண்ணத் தோடு இராமனே என்று சொல்லாமல், 'மன்னனைக் கொணர்வான்' என்று கூறினன் பரதன்.
குகன், கற்பனையிலும் பரதன் இவ்வளவு உத்தமனுக இருப்பான் என்று கினேக்கவில்லை. பரதன் கொடியவன்
1. குகப்படலம், ேே