உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அழியா அழகு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 169

புகழைக் கொடுப்பதுதானே முறை?' என்ற கேள்வி தோன்றலாம். இப்படலத்தின் பெயர். "குகப் படலம்' என்று இருந்தாலும் இது பரதனுடைய பெருமையைக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. பின்னலே குகன், 'ஆயிரம் இராமர் கின் கேழ் ஆவரோ' என்று வியந்து உருகப் போகிருன். அதற்கு ஏற்ற வகையில் கம்பன், பரத னது புகழைப் பாடுவது தவறன்று.

கம்பன் குகனேப்பற்றிச் சொல்லும் இடங்களில் அவனுடைய உருவத்தை வருணிக்கிருன். அவன் இயல்பு முதலிய பெருமையைச் சொல்லும் இடங் களில், "உள்ளங் தூயவன், தாயின் கல்லான்' என்று இலக்குவன் கூறுவதாக அமைக்கிருன். 'திராக் காதலன்', 'யாதினும் இனிய நண்பன்' என்று இராமன் சொல் கிருன், மெய்யுயிரனையான். அன்பன், வாள்வீரற்கன்பன். இராமனுக்கு உயிர்த் துணைவன், கரைகாணுக் காதலான், துாய தோழன் என்று கவியின் கூற்ருகக் குகனேச் சொல் கிருன் கம்பன். இந்த அளவில் குகனுடைய பெருமை யைக் கூறினவன், திடீரென்று, "தகவுடையோர் சென்னி யினும் சிந்தையினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்" என்று புகழக் காரணம் இல்லை. ஆதலின் அதுவும் பரதனேயே குறிக்கிற தென்பதே பொருந்தும்.

இந்தப் பாடலுக்குப் பின், தழுவிய புளினர் வேந்தன்' என்று வருகிறது. அதற்குச் சீர்த்தியானகிய பரதன் தழுவிய புளினர் வேந்தன் என்று பொருள் கொள்ள வேண் டும். அல்லது தழுவப்பட்ட புளினர் வேந்தன் என்றும் கொள்ளலாம்.

இதுகாறும் காட்டியவற்ருல், வந்தெதிரே தொழு தானே' என்ற பாட்டில் வரும் தொழுதல், வணங்குதல்,

1. கங்கைப், 89, 2. கங்கைப், 45.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/177&oldid=523379" இலிருந்து மீள்விக்கப்பட்டது