பக்கம்:அழியா அழகு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அழியா அழகு

குகன். ஆதலின், இங்கே இரு என்ருன். அங்க வேண்டு கோள் பலிக்கவில்லை, இராமனைப் பிரியாமல் இருக்க மற்ருெரு வழி இருக்கிறதே! அவைேடு குகன் போகலாம்

அல்லவா? இந்த எண்ணத்தை அந்தப் பக்தன் வெளி

யிடலானன்.

"வழியிடையே எது நல்ல வழி என்று முன் சென்று விரைவில் தேடி வருவேன். உரியகாலத்தில் நறுமணமும் சுவையும் உள்ள கனியையும் காயையும் தேனையும் கொண்டு வந்து கொடுப்பேன். தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இருப் பிடங்களே அமைப்பேன். ஒரு கொடிப்பொழுதும் உங்களைப் பிரியாமல் இருப்பேன். காயினேன். உங்களுடன் வரும் பாக்கியம் பெற்ருல் இவ்வளவும் நிகழ வாய்ப்பு இருக்கும். அருள வேண்டும்” என்று கெஞ்சின்ை.

கெறியிடை கெறிவல்லே

கேடினென் வழுவாமல்,

கறியன கனிகாயும்

ாறவிவை தரவல்லேன்;

உறைவிடம் அமைவிப்பேன்;

ஒருகொடி வரைஉம்மைப்

பிறிகலன், உடன்ஏகப்

பெறுகுவென் எனின்காயேன்." !

(தெறியிடை - பல வகையான கவர்த்த வழிகளி னிடையே வல்லே - விரைவில். கேடினென் - தேடிக் கண்டுபிடித்து, கறவு - தேன். உறைவிடம் - தங்கும் இடம். கொடிவரை - கொடியளவு நேரம், உடன் ஏகப் பெறுகுவென் எனின், நாயேன் தரவல்லேன், அமைவிப்பேன் பிரிகலன் என்று கூட்டுக.) 廖 、

1. கங்கைப். 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/106&oldid=523308" இலிருந்து மீள்விக்கப்பட்டது