உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆடும் தீபம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீபம்

71


மீட்க அவள் ஏனோ விரும்பவில்லை. மௌனச் சிலையாய், மொழியற்ற வடிவமாய் சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த அவர், “ஏன் அம்மா! இப்படி ஒரேயடியாய் வெட்கப்படுகிறாயே?” என்று கூறி, அருணாசலத்தின் பக்கம் முகத்தைத் திருப்பி “என்னப்பா அருணாசலம் … …?” என்று முடித்தார்.

அவர் பார்வையின் கருத்தை உள் வாங்கிக் கொண்ட அருணாசலம் “புதிது பாருங்கள், கூச்சமாயிருப்பது சகஜம்தானே? … … அதெல்லாம் கவலைப்படாதீங்க … …காலில் சலங்கையைக கட்டிக் கொண்டால் போதும். அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீங்க … …என்ன அல்லி அப்படித்தானே …?” என்றான்.

அல்லி மேலும் தலையைக் குனிந்து கொண்டாள். “ஆல்ரைட்! ஆல்ரைட்! பார்க்கலாம்,” என்றார் பட முதலாளி பரமானந்தம்.

அல்லியின் இதழ்கள் மென்மையாகப் பிரிந்து, இள நகையைச் சிந்தின. ஓரக் கண்ணால் அவளது முக பாவத்தை கவனித்த, பரமானந்தம் திருப்தியடைந்தார்.

“சரி, எதற்கும் நாளை காலை ஸ்டுடியோவிற்கு வாருங்கள். நடன டைரக்டர் நடராஜன் ஆட்டத்தைக் கவனிக்கட்டும்; திருப்திகரமாக இருந்தால், அடுத்த வாரம் ரிலீசாகப் போகும் ‘குழந்தையே குடும்பத்தின் விளக்கு’ படத்திலேயே, ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்!”

அன்று அல்லி கலைக்கூடத்திற்குத் திரும்புகையில், இரவு மணி எட்டடித்து விட்டது. அடையாற்றிலிருந்து கிளம்பிய அருணாசலம், அல்லியையும் அழைத்துக் கொண்டு, சென்னையின் வழுவழுப்பான தார்ப் பாதைகளில் உல்லாசமாக நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆடும்_தீபம்.pdf/72&oldid=1689446" இலிருந்து மீள்விக்கப்பட்டது