86 அழியா அழகு
(உவகை தூண்ட மகிழ்ச்சி மேல் ஓங்க. சேனே வெள் ளத்தை அழைத்து ஏ.வி. அழைத்தனன்: முற்றெச்சம். வடிசிலே - என்ருகச் செய்யப்பட்ட வில். விக்கி - கட்டி இரைத்து - ஒலித்து.)
இராமன் தன் காட்டை விட்டு இந்தத் தவக்கோலத் தோடு புறப்பட்டதற்கு உரிய காரணம் இன்னதென்று தெளிவாகக் குகன் தெரிந்துகொள்ள வில்லை. இராமனே க் கண்டபோது உண்டான உணர்ச்சியும், அவைேடு பேசி அங்கேயே தான் தங்க இசைவு பெற்றதனுல் உண்டான எழுச்சியும் இப்போது ஒருவாறு அடங்கி நிற்க, அவன் மனம் இந்தத் திறத்தில் எண்ணமிட லாயிற்று. "அரசக் கோலத்தை மாற்றித் தவக்கோலத்தைச் சாத்திக் கொள் வதற்குக் காரணம் யாதாயிருக்கும்? என்று யோசித்தான்.
அருகில் துயரமே வடிவமாக கின்ருன் இலக்குவன். 'இராமன் நாடாளாமல் காடாளும்படி ஆயிற்றே!' என்ற பருவரல் அவனிடம் கிரம்பி யிருந்தது. அதன் அடியில் பரதனிடத்தும் கைகேயியினிடத்தும் மூண்ட கோபக்கனல் பதுங்கி யிருந்தது. குகன் அவனைப் பார்த்து, "ஐயனே, இப்பெருமான் திருநகரை நீங்கிக் காடு நோக்கி வந்த கார ணத்தைத் தெரிவித்தருள வேண்டும்" என்று கேட்க, அவன் அந்த வரலாற்றைச் சொன்னன்.
இலக்குவன் தன் மனப்பாங்குக்கு ஏற்றபடியே அந்தச் செய்தியை உரைத்திருப்பான். அதைக் கேட்ட குகனுக் கும் மிக்க பரிவும் துன்பமும் உண்டாயின. முடிசூட்டு: விழா நிகழவேண்டிய நாளில் கரை நீங்கி நடக்கவேண்டி யிருந்ததே என்பதை எண்ணிய போது அவன் உள்ளம் இரங்கியது. இருகண் நீர் அருவியாக வழிந்தது, இராமன் குணம் நிறைந்தவன் என்பதை இதற்குள் அவன் கேரில் உணர்ந்து கொண்டான். பிறருடைய உள்ளத்தை அறியும்