ി ിജു 181
இத்தனை இயல்புகளும் மந்தரையின் சொல்லைத் தள்ளுவதற்கும், அவளை ஒறுப்பதற்கும் தக்க காரணமாக கின்று, இராமன் முடிசூடும் நிகழ்ச்சிக்குத் தடை கேராமல் செய்திருக்கலாம். அதுவே நேரான, இயல்பான விளைவு. ஆல்ை முதலிலே கோணல் வந்து விட்டது; கூன் விழுந்த விட்டது. விதி வந்து அமுக்குவதால் இந்தக் கோணல் வந்த பிறகு அதனே கிமிர்த்துவதற்குரிய வாய்ப்புகள் இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவ்விதியின் பாரம் அதை கிமிர வொட்டாமல் செய்துகொண்டே யிருக்கிறது. வளைந்த உடம்பும் வளைந்த உள்ளமும் வளைந்த மொழியும் உடைய கூனியின் உருவிலே விதி விளையாடுகிறது. தூய சிந்தையும் தூயமொழியும் உடைய கைகேயி, தன் இயல்புக்கு மாருக வளைந்தாள்; அவள் சிங்தை திரிந்தது.
தீய மந்தரை அவ்வுரை
செப்பலும் தேவி தூய சிந்தையும் திரிந்தது. '
ஆம்! அவள் சிங்தை தூயது; நேரானது; வளையாதது. அதைக் கூனி வந்து தீயதாக்கினுள்: வளைத்தாள்: திறம் பிடச் செய்தாள். கூனியா செய்தாள்? இல்லை, இல்லை; விதிதான் அப்படிச் செய்தது.
யாருடைய விதி? விதி என்பது உலகில் அவரவர்கள் செய்த கல்வினை திவினைகளுக்குரிய இன்ப துன்பங்களே ஊட்டுவது. ஒவ்வொருவரிடத்தும் விதி வெவ்வேறு பகுதி யாக கிற்கிறது. சமஷ்டியாக அல்லது பிழம்பாக சிற்ப தையும் விதி என் கிருேம்; முறையென்றும் ஊழ் என்றும் இதைச் சொல்வார்கள். ஒருவனுடைய பகுதியாக, வியஷ்டி யாக தனியாக, சிற்பதும் ஊழ்தான்; அதனே அவன் தலைவிதி
என்றும் சொல்வது உண்டு.
1. மந்தரை சூழ்ச்சிப் படலம், 77.