142 அழியா அழகு
என்பது திருக்குறள். ஆடவர்கள் ஆண்மை உடையவர்கள்; வீரம் உடையவர்கள்; பகையைப் போக்கி இடர்களே மாற்றும் மிடுக்கு உடையவர்கள்; அத்தகைய ஆண்மை யினும் சிறந்த பேராண்மை ஒன்று உண்டு. பிறருடைய மனைவியைக் கண்ணெடுத்தும் பாராத பண்பு அது. பிறன் மனே நோக்காத பேராண்மை உடையவன் இராமன். அவன் இளவலாகிய இலக்குவனும் அத்தகையவனே. அதனை உணர்த்தவே வால்மீகி முனிவர் இந்த விகழ்ச்சியைக் காடடிஞா.
இராமனுடன் பிறந்து, வளர்ந்து. உடன் போக்த தம்பிக்கு அவனைப்போன்ற உயர்குணம் இருந்தது வியப் பன்று. அது இயற்கை. அப்பெருமான் தம்பி என்று அன்புடன் ஏற்றுக்கொண்ட பெருமையை உடையவன் குகன். அவன் ககர வாழ்வை அறியாதவன். கொலே வேடர் குலத தில் உதித்தவன். ஆயினும் இராமன் அவ னுடைய குணங்களைக் கண்டு 'ங்' என் தம்பி என்று கூறி அன்பு செய்தான். இராமனிடம் இருந்த பேராண்மை குகனிடமும் இருந்தது என்பதை அறிந்தால், இராமன் அவனத் தம்பியாக ஏற்றுக்கொண்டத பொருத்தம் என்ற எண்ணம் கம்பால் வலிமை அடையும். ஆதலின் கம்பன் இங்கே குகனுடைய பேராண்மையைக் காட்டுகிருன். அதனைத் தனியே எடுத்துச் சொன்னல் சுவை இராது. எத் தனக்கு எத்தனே ஒரு கருத்தைக் குறிப்பாக வைத்துக் கவிஞன் காட்டுகிருனே, அத்தனைக்கு அத்தனை சுவை மிகுதியாகத் தேங்கும்.
குகன் இராமனுடைய திருமேனி எழிலைக் கண்டு உண்டு களித்தவன். அப்பிரானுடைய அஞ்சன வண்ணம் அவன் உள்ளத்தைக் கொள்ளே கொண்டது. ஆ த லி ன் இராமபிரானே கினைக்கும்போதெல்லாம்