பக்கம்:இல்லற நெறி.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

இல்லற நெறி


பதே சிறந்த வழியாகும். இளமையில் அறிவுக் குகந்த முறையில் பால் கல்வியை அளித்தல் வேண்டும் என்பதே இதன் அடிப்படை.ஒருசிறுமியின்மனத்தில் அவளதுதொடக்க வாழ்வில் பாலைப்பற்றி ஊன்றப் பெறும் மனப்பான்மைகள் பிற்கால வாழ்வில் அவளது பால் நடத்தையைப் பெரிதும் பாதிக்கலாம். நேர் முறையிலும் நேரல் முறையிலும் பெற் ருேர்கள் பாலைப்பற்றி தம்முடைய மதிப்பீடுகளையும் மரபமைதிகளையும் வலுவந்தமாசச் சுமத்துகின்றனர். பெற் ருேர்கள் சரியானவை எவை தவருனவை எவை என்ருே, தகுந்தவை எவை தகாவை எவை என்ருே, நல்லவை எவை தியவை எவை என்ருே கருதக் கூடிய உணர்வே அன்ருட வாழ்வில் அவர்களுடைய குழந்தைகளிடமும் கடத்தப் பெறுகின்றது. ஆகவே, பெற்றேர்கள் சில சமயம் தாம் தம்முடைய குழவிகளின் பாற்கோலத்தைத் தாங்கள் உருவாக்கிய வரையறை செய்வதில் அமைக்கும் நிலைத்த விளைவினை உணர்தல் வேண்டும். -

மேலும், இளைஞர்கள் திருமண உறவினைப் பெறக்கூடிய அளவுக்கு அவர்களே ஆயத்தம் செய்து அதற்கேற்ற பாற் கல்வியிணைப்புகட்டுவதிலும் பெற்ருேர்கள் கவனம் கொள்ள வேண்டும். புணர்ச்சியின் தொடக்கத்தில் கணவன்தான் பொறுமையையும் அடக்கத்தையும் மெற்கொள்ள வேண்டிய இன்றியமையாமையை உணர்தல் வேண்டும்; தான் தன்னுடைய துணைவியின் முழு நம்பிக்கையையும் பொறுப்புறுதியையும் பெறுவதற்கு முயல வேண்டும் என்ப தையும் புரிந்துகொள்ளல் வேண்டும். வாத்ஸ்யாயனரின் கருத்துப்படி பெண்கள் மென்மையானவர்கள்; இணை விழைச்சில் மென்மையாகத் தொடங்குவதை விரும்புபவர் கள் தம்முடன் சரியாகப்பழகாத ஆண்கள் அவர்களை மிருகத் தனமாக நெருங்கினல், அவர்கள் சில சமயம் கலவியையே வெறுக்கக்கூடியவர்களாக மாறிவிடுவர்; சில சமயம் ஒரு

16. பாற்கோலம்.-Sex pattern

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/426&oldid=1285282" இலிருந்து மீள்விக்கப்பட்டது