பக்கம்:கண்ணன் கருணை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ஊனக் கண்கொண்டு ஒளி வடிவைக்கான இயலாதென்று கண்ணன் ஞானக்கண் கொடுத்தான் பரம்பொருளும் பெரும்பொருள் ஆனது. எழுத்தில் எழுதரிய பேருருவை எழுதவோ மனத்தில் வரித்தபடி வழுத்துகின்றேன் துாறு நூறு சூரியர்கள் ஒன்றாகி நின்றெழுந்த ஒளிப்பிழம்பு திருமுகம் ஆக ஞாயிறும் திங்களும் திருவிழி மலர்களாக விண்ணுக்கு மேலெல்லை கரிய முடியானது திரண்டெழுந்த தோளிரண்டும் இமயமோ விந்தியமோ, கண்களிரண்டில் சுரந்து வந்த கருணை வெள்ளம் கங்கையோ காவிரியோ அந்திச் செவ்வானம் பவள வாயிதழ்களோ உள் வாங்கி உயிர்த்துவிட்ட சிறுமூச்சு தென்றலென்றால் நெடுமூச்சு பெரும்புயலோ நீலக்கடல் பரப்பு நெடுமாலின் திருமார்பே அண்டபேர் அண்டங்கள் அடிவயிறோ வான் சுமக்கும் தூண்களே வலிய கால்கள் நெடுங்கரங்கள் நீள்புவி அளக்கும் கோல்கள் வில்லென்று வேலென்று வாளென்று சொல்லுகின்ற படைவரிசை இறைவன் திருவிரல் அணிகளோ இந்திர ருத்திர கிம்புரு நாரத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/33&oldid=1363773" இலிருந்து மீள்விக்கப்பட்டது